இடுகைகள்

சர்க்கரை நோயா? இனி கவலை வேண்டாம்

 ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் வழிகள்      ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதே சர்க்கரை நோய் ஆகும்.  இது இப்போது நம்மில் பெரும்பாலோனோற்கு உள்ள நோய் ஆகும்.  இதற்கு காரணம் தற்போது உள்ள உணவு முறையே ஆகும்.  நாவடக்கம் இல்லாத காரணத்தால் இன்று இப்படி அவதிப்பட்டு கொண்டு இருக்கிறோம்.   மருத்துவமனையில் பணத்தை விரையம் செய்கிறோம்.  பாடுப்பட்டு உழைத்து சேர்த்த பணத்தை ஏன் வீனே செலவு செய்ய வேண்டும்.  நாவடக்கமும் நாள்தோறும் உடற்பயிற்சியும் செய்தால் இந்த பணத்தை சேமிக்கலாம்.  பணம் செமிப்பது அல்லாமல் ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடன் இருக்கலாம்.      கணயத்தில் சுரக்கும் ஹார்மோன் இன்சுலின் ஆகும்.  இதன் சுரப்பு குறையும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு படிப்படியாக உயருகிறது.  இது சர்க்கரை நோய் ஆகும்.  இன்சுலின் ரத்தத்தில் குளுக்கோஸ் சர்க்கரையை உடைத்து உடலுக்கு தேவையான சக்தி உருவாகிறது.  இதன் சுரப்பு குறையும் போது உடைக்கப்படாத குளுக்கோஸ் சர்க்கரை சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.  குளுக்கோஸ் கலந்...

போட்டிதேர்வு தரத்தில் தனிவட்டி கணக்குகள் | simple interest

    தனிவட்டி  கணக்குகள்       தனிவட்டி கணக்குகள் ஒருவருக்கு வட்டிக்கு கொடுத்த பணத்தை வட்டிக்கு கொடுத்த காலம், வட்டியின் சதவீதம் மற்றும் அசல் தொகை கொண்டு கணக்கிடப்படுகிறது.  இதனால் கணக்கிடுவது மிகவும் எளிமை ஆகிறது.  மேலும் இதில் ஏதாவது ஒரு மதிப்பு தெரியாவிட்டாலும் மற்ற மதிப்புகளை கொண்டு நாம் அதனை கண்டு பிடிக்க முடியும்.  இது போன்ற கணக்குகள் தற்போது போட்டி தேர்வுகளில் தவிர்க்க முடியாத கேள்வி ஆகி விட்டது.  இது போன்ற எளிமையான கணக்குகளில் கூட கோட்டை விட்டு நம்மில் பலர் அரசு வேலை கனவுகளை பாலாக்கி விடுகிறோம்.   இனி அது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க தனிவட்டி கணக்குகளை முழு விவரத்துடன் காண்போம்.  போட்டிதேர்வு மட்டுமின்றி bank, finance company, installment போன்ற வேலைகளில் தனிவட்டி என்பது அடிப்படை.  இது இல்லை எனில் அந்த வேலைகள் இயங்குவது கடினம்.  தனிவட்டிக்கு சில formula உள்ளன.   அதை பின்வருமாறு காண்போம். தனிவட்டி =                அசல் ×ஆண்டு ×வட்டி வீதம் /100   ...

முடி கொட்டுவதை தடுக்க வழிகள் உள்ளது கவலைபடாதீர். | hair fall solutions in tamil

 முடி உதிர்வு பிரச்சனைக்கான தீர்வுகள்       ஒருவருடைய அழகை உயர்த்தி காட்டுவத்தில் அவருடைய முடியானது முக்கிய பங்கு வாகிக்கிறது.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான ஸ்டைலான தோற்றத்தில் முடியை வாரி தன்னை அழகுபடுத்தி கொள்கின்றனர்.  எங்கு கண்ணாடியை பார்த்தாலும் முதலில் சரி செய்வது முடியை தான்.  இவ்வாறு முடியை உயிரென பார்ப்பவர்களுக்கு உள்ள முக்கியமான பிரச்சனை எதுவென்றால் அது முடி உதிர்வு.  ஒவ்வொரு முறை தலை சீவும்போதும் கொட்டும் முடியை பார்த்து வருந்துபவர்கள் அதிகம்.  இது அவர்கள் அழகையே கெடுத்து விடுகிறது.  பொது இடங்களில் நடக்கும் போது கூட கூச்சமுடனும் வெட்கத்துடனும் நடக்கும் நிலை ஏற்படுகிறது.          முடி உதிர்வுக்கு பல காரணங்கள் உண்டு.  அவற்றில் சிலவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். ஆனால் சில இயற்கையாக உள்ளவை. அவற்றை நம்மால் தவிர்க்க முடியாது.  நாம் தினமும் காலை முதல் மாலை வரை சுமார் 30 முதல் 50 வரை எண்ணிக்கையிலான முடிகளை இழக்கிறோம்.  அன்றாடம் ஏற்படும் சுற்று சூழல் மாறுபாடு, மரபியல் ரீதியாக, ஊ...

எளிய முறையில் வீட்டில் உள்ள பொருள்கள் கொண்டு முகப்பருவிற்கு தீர்வுகள் |pimples prevention and treatments

 முகப்பரு வராமல் தடுக்கும் வழிகள்             தற்போது உள்ள சூழலில் இன்றையை இளைஞயர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆகியோருக்கு தனது அழகின் மீது தனி அக்கறை உண்டு.  ஆனால் அவர்கள் அழகை கெடுப்பதில் முகப்பரு முக்கியமான ஒன்று.  இது 13 வயது முதல் வர தொடங்குகிறது.  முகப்பருவானது பெரும்பாலும் உடலில் ஹார்மோன் பிரச்சனை, காற்று மாசு,  மன அழுத்தம் போன்ற காரணங்களால் உருவாகிறது.  இதை கட்டுப்படுத்துவது இன்றைய அழகு பிரியர்களுக்கு பெரும் சவாலாக அமைகிறது.  முகப்பருவை வராமல் கட்டுப்படுத்தும்  பத்து வழிமுறைகள் பற்றி காண்போம்.  1.   முகத்தை நன்கு கழுவுதல் :       முகப்பருவை தடுக்கும் முறைகளில் மிக முக்கியமான முறை முகத்தை கழுவுதல் ஆகும்.  தினமும் இருமுறை ஆவது முகத்தை கழுவுதல் வேண்டும்.  இப்படி கழுவும்போது முகத்தில் இருக்கும் மாசு பொருள்கள், எண்ணெய் பொருள்கள் மற்றும் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறுகிறது.   ஒரு நாளைக்கு இருமுறை முகத்தை கழுவுதல் போதுமானது.  முகத்தை கழுவும் போது வெதுவெதுப்பான...

எளிய வழிகளில் எடையை குறைக்கும் சில வழிகள் | Easy ways to weight loss in tamil

 உடல் எடையை குறைக்கும் வழிகள்             தற்போதையை  சூழலில் நம் பெரும்பாலான மக்களிடையே காணப்படுவது உடல் எடை அதிகரித்து குண்டானவர்களாக காணப்படுகின்றனர்.  இதற்கான முக்கிய காரணம் அதிக கலோரி உணவு எடுத்து கொள்வது, குறைவான உடல் உழைப்பு, போதைய உடல் பயிற்சி இல்லாமை, சரியான உணவு பழக்கம் இன்மை, துரித உணவை (fast food, chips and oil items)அதிகமாக விரும்புவது ஆகியவை ஆகும்.  இதனால் உடலில் அதிக கொழுப்பு சேகரிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்கிறது.  இதனால் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் அதிகரிப்பு, இதய நோய், இரத்த குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகள் உடலில் உண்டாகின்றன.  " சரியான வயதிற்குரிய எடையை விட 10% அதிகமாக இருப்பது உடல் பருமன் என கூறப்படுகிறது".        உடல் பருமனை கண்டுபிடிக்க ஒரு வழிமுறை உண்டு.   உடல் பருமனை உடல் எடை குறியீடு என கூறப்படும் BMI (Body Mass Index) என்ற அளவீட்டை கொண்டு அளவிடலாம். உங்களின் உடல் எடையை கிலோகிராம் அளவில் கொண்டு உங்கள் உடல் உயரத்தின் மீட்டர் அளவின் மடங்கினால் வகுத்தால் BMI அதாவது நீங்கள் கு...

நற்றிணை பற்றிய முழு விவரம் | natrinai in sangam literature

      நற்றிணை                 நல் + திணை = நற்றிணை ஆகும்.  எட்டுதொகை நூல்களில் ஒன்று நற்றிணை ஆகும்.  எட்டுதொகை நூல்களில் நல்   என்ற அடைமொழி கொண்ட  நூல்  ஆகும்.  இன்னூலில் மொத்தம்  நானூறு (400 பாடல்கள் ) பாடல்கள்  உள்ளன.   உள்ள நானூறு பாடல்களும் 175  புலவர்களால் பாடப்பட்டுள்ளது.   தொகுப்பித்தவர் பெயர் பன்னாடு தந்த மாறன் வழுதி   ஆவார்.  ஆனால் இன்னூலை தொகுத்தவர்  பெயர் இன்னும் தெரியவில்லை.  இன்னூலில் உள்ள  பாடல்கள்  பெரும்பாலும் 9  அடிகள் சிறுமையும் - 12  வரை பெருமையும் கொண்டு உள்ளன.  இன்னூலில் உள்ள பாடல்கள் அனைத்தும் அகவற்பா அல்லது (ஆசிரியப்பா ) என்னும் பாவகையால்  ஆனது.   வழங்கப்படும் வேறு பெயர்கள்,       1. நல் நற்றிணை       2. நற்றிணை நானூறு                                  ஆகும்....

அகநானூறு | aganaanooru

    அகநானூறு           அகம் +நான்கு + நூறு  இவற்றை சேர்த்து எழுத அகநானூறு என கிடைக்கும்.  அகநானூறு எட்டுத்தொகை நூலிகளில் ஒன்று.  இன்னூலில் மொத்தம் நானூறு (400 பாடல்கள் ) பாடல்கள் உள்ளன.  இந்த நானூறு பாடல்களும் நூற்று நாற்பத்து ஐந்து  (145) புலவர்களால் பாடப்பட்டுள்ளது.  இன்னூலை தொகுத்தவர்  " மதுரை உப்பூரிகுடிக்கிழார் மகனார்  உருத்திரசன்மர் " ஆவார்.  இன்னூலை  தொகுப்பித்தவர் " பாண்டியன் உக்கிரப்பெருவழுதி " ஆவார்.  இன்னூல் 13 அடிகள் சிறுமையும் - 31 அடிகள் பெருமையும் கொண்டுள்ளது.  அகநானூறுயின்  பாவகை "  அகவற்பா அல்லது ஆசிரியப்பா ".  இன்னூலுக்கு  வேறு பெயர்கள்,        1. நெடுந்தொகை,        2. பெறுந்தொகை நானூறு,       3. அகப்பாட்டு                     - என வேறு பெயர்களும் உண்டு.  இன்னூல் ஒரு அகநூல் ஆகும்.  இன்னூலின் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர்  "  பாரதம் ...

புறநானூறு | puranaanooru

   புறநானூறு                 சங்க இலக்கியங்கள் என அழைக்கப்படும் நூல்கள் பாத்துப்பாட்டும், எட்டுதொகையும் ஆகும்.  சங்க இலக்கியங்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது.   அந்த எட்டுதொகை நூலில் உள்ள எட்டு நூல்களில் புறம் பற்றி கூறும் முதன்மையான நூல் புறநானூறு ஆகும்.  புறம் + நான்கு +நூறு = புறநானூறு  ஆகும்.  புறத்திணைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு புறநானூறு நூல் ஆகும்.  இன்னூலில் மொத்தம் நானூறு பாடல்கள் உள்ளன.  இன்னூல் நூற்று ஐம்பதெட்டு (158 புலவர்கள் ) புலவர் மக்களால் பாடப்பட்ட நூல் ஆகும்.  இன்னூல் அகவற்பா ( ஆசிரியப்பா ) என்னும் பா வகையால் ஆன நூல்.  இன்னூலை புறம் எனவும் புறப்பாட்டு எனவும் தமிழர் கருவூலம் எனவும் வேறு பெயர்கள் கொண்டும் அழைப்பர்.  இன்னூலுக்கு கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் "பாரதம் பாடிய பெருந்தேவனார் " ஆவார்.  இன்னூலை ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு  செய்துள்ளார்.   புறநானூறு நூலில் உள்ள பாடல்களின் அடிகள் 4 அடி சி...

ஐந்து மூலிகைகளின் தொகுப்பு சிறுபஞ்சமூலம் | sirupanjamoolam in pathinenkeel kanakku

  சிறுபஞ்சமூலம்       பதினெண்கீழ்கணக்கு நூலகளில் 18 நூல்கள் உள்ளன.  அந்த 18 நூல்களில் சிறுபஞ்சமூலமும் ஒன்று.இன்னூல் "வெண்பா" என்னும் பாவகையால் ஆனது.  இன்னூலில் மொத்தம் கடவுள் வாழ்த்து பாடலுடன் 97 வெண்பாக்கள் உள்ளன.  சிறுபஞ்சமூலத்தை இயற்றியவர் காரியாசன் புலவர் ஆவார்.  " மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் "என்ற சிறப்பு பெயராலும் அழைக்கப்படுகிறார் என் சிறப்புப்பாயிரத்தில் கூறப்பட்டுள்ளது. இவருக்கு மாக்காரியாசன் என்ற மற்றொரு சிறப்பு பெயரும் உண்டு.   காரியாசனும் கனிமேதாவியாரும் ஒரே கல்வி சாலையில் கல்வி பயின்றவர்கள் ஆவர்.  இவர் சமண சமயத்தை சேர்ந்தவர்.  கண்டங்கத்தரி சிறுவழுத்துணை சிறுமல்லி பெறுமல்லி நெருஞ்சி ஆகிய ஐந்து மருத்துவ குணமிக்க தாவரத்தின் வேர்களும் மக்ககளின் உடல் நோய்களை அகற்ற பயன்படுத்தப்பட்டது.  அதுபோல இந்த சிறுபஞ்சமூலத்தில்  ஒவ்வொரு பாடலிலும் ஐந்து ஐந்து அறக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.  இந்த ஐந்து அறக்கருத்துக்களும் மக்களிடம் உள்ள அறியாமை என்னும் நோயை அகற்ற உதவுகிறது.  எனவே தான் இன்னூலுக்கு சிறுபஞ...

திரிகடுகம் | thirikadukam

     திரிகடுகம்             திரிகடுகம் பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று ஆகும்.  இன்னூலை எழுதியவர் நல்லாதனார்.  இவர் திருநெல்வேலி மாவட்டத்தில்  திருத்து என்னும் ஊரை சேர்ந்தவர்.  நல்லாதனார் வைணவ சமயத்தை சேர்ந்தவர்.  "செரு அடுதோள் நல்லாதன் " என்ற மற்றொரு பெயரும் இவருக்கு உண்டு.  திரி என்றால் மூன்று என்று பொருள்.   கடுகம் என்றால் காரமுடைய பொருள் ஆகும்.  சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருளால் ஆன மருந்தின் பெயர் திரிகடுகம் ஆகும்.  சுக்கு, மிளகு, திப்பிலி ஆன மருந்து பொருள் உடல் நோயை தீர்க்கும்.  திரிகடுகம் ஒவ்வொரு பாடலிலும் உள்ள மூன்று கருத்துகளும்  மக்களில் அறியாமையை நீக்கும் என்பது இதன் பொருள்.          செரு அடுதோள் நல்லாதன் என பாயிரம் குறிப்பிடுவதால் இவர் ஒரு போர் வீரராக இருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.  இன்னூலின் ஒவ்வொரு பாடலிலும் மூன்று மூன்று கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.  இன்னூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் "இம்மூன்று  (அ ) இம்மூவர்...