அகநானூறு | aganaanooru

    அகநானூறு


         அகம் +நான்கு + நூறு  இவற்றை சேர்த்து எழுத அகநானூறு என கிடைக்கும்.  அகநானூறு எட்டுத்தொகை நூலிகளில் ஒன்று.  இன்னூலில் மொத்தம் நானூறு (400 பாடல்கள் ) பாடல்கள் உள்ளன.  இந்த நானூறு பாடல்களும் நூற்று நாற்பத்து ஐந்து  (145) புலவர்களால் பாடப்பட்டுள்ளது.  இன்னூலை தொகுத்தவர்  " மதுரை உப்பூரிகுடிக்கிழார் மகனார்  உருத்திரசன்மர் " ஆவார்.  இன்னூலை  தொகுப்பித்தவர் "பாண்டியன் உக்கிரப்பெருவழுதி " ஆவார்.  இன்னூல் 13 அடிகள் சிறுமையும் - 31 அடிகள் பெருமையும் கொண்டுள்ளது.  அகநானூறுயின்  பாவகை " அகவற்பா அல்லது ஆசிரியப்பா ".  இன்னூலுக்கு  வேறு பெயர்கள்,

       1. நெடுந்தொகை,
       2. பெறுந்தொகை நானூறு,
      3. அகப்பாட்டு
                    - என வேறு பெயர்களும் உண்டு.  இன்னூல் ஒரு அகநூல் ஆகும்.  இன்னூலின் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர்  " பாரதம் பாடிய பெருந்தேவனார் " ஆவார்.  இன்னூல் மூன்று பிரிவுகளை உடையது.  அவை,

பிரிவு பாடல்களின் எண்ணிக்கை
கழிற்றியானை நிரை 120 பாடல்கள்
மணிமிடை பவளம் 180 பாடல்கள்
நித்திலக்கோவை 100 பாடல்கள்

      குடவோலை முறை பற்றி கூறுகிறது.  ஒழுங்கு முறையில் தொகுக்கப்பட்ட ஒரே தொகைநூல் அகநானூறு ஆகும்.   நந்தர்கள் தம்  செல்வங்களை கங்கை ஆற்றின் அடியில் புதைத்து வைத்த செய்தியை கூறுகிறது.

" பல்புகழ் நிறைந்த வேல்போர் நந்தர்

 சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை

 நீர்முதல் கரந்த நிதியங் கொல்லோ? "

         என்ற அடிகள் உணர்த்துகின்றன.
யவனர்கள் வாசனை பொருளான மிளகை பெறுவதற்கு வந்த செய்தியை,

"யவனர் தந்தவினைமாண் நன்கலம்

 பொன்னோடு வந்துகறியோடு -
                                                           பெயரும் "
      என்ற அடிகள் நன்கு விளக்குகின்றன.   இன்னூலுக்கு உரை எழுதியவர் நா. மு. வேங்கடசாமி நாட்டார் ஆவார்.   பண்டைய  தமிழர்களின் திருமணம் பற்றி கூறுகிறது.  பண்டைய இலக்கியங்களில்  செய்திகள்  உள்ள நூல் அகநானூறு ஆகும்.   திணைக்குறிய பாடல்களின் எண்கள்,
  

திணை பாடல் எண்கள்
குறிஞ்சி 2,8,12,18,....
முல்லை 4,14,24,....
மருதம் 6,16,26,....
நெய்தல் 10,20,30,....
பாலை 1,3,5,7,9,... (ஒற்றைபடை எண்கள் )

 அகநானூறு - பாடல் :

" ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன்-
                                                          மலர்ந்த
  வேங்கை வெறித்தழை வேறுவகுத்-
                                                        தன்ன
  ஊன்பொதி அவிழாக்  கோட்டுகிர்க் -
                                                         குருளை
  மூன்றுடம் ஈன்ற முடங்கர் நிழத்த

 குறுகல் விடரளைப் பிணவுப்பசி-
                                                 கூர்ந்தேனப்
 பொறிகிளர் உழுவைப் போழ்வாய்-
                                                            ஏற்றை
அறுகோட்டு உழைமான் ஆண்குரல் -
                                                          ஓர்க்கும்
நெறிபடு கவலை நிரம்பா நீளிடை

வெள்ளி வீதியைப் போல நன்றுஞ்

செலவயர்ந் திசினால் யானே -
                                                     பலபுலந்து
உண்ணா உயக்கமொடு உயிர்செலச் -
                                                    சா அய்த்
தோளும் தொல்கவின் தொலைய-
                                                          நாளும்
பிரிந்தோர் பெயர்வுக் கிரங்கி

மருந்துபிறி தின்மையின் இருந்து-
                             வினை இலனே.

                                        - ஔவையார்.

"பசைபடு  பச்சை நெய்தோய்த் தன்ன

சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை

பகலுறை முதுமரம் புலம்பப் போகி

முகைவாய் திறந்த நகைவாய்-
                                                             முல்லை
கடிமகள் கதுப்பின் நாறிக் -
                                                 கொடிமிசை
வண்டினந் தவிர்க்கும் தண்பதக்-
                                                             காலை
வரினும் வாரா ராயினும்-
                                              ஆண்டவர்க்கு
இனிதுகொல் வாழி தோழி-
                                                    யெனத்தன்
பல்லிதழ்  மலைக்கண் நல்லகம்-
                                                            சிவப்ப
அருந்துய ருடையள் அவளேன-
                                                   விரும்பிப்
பாணன் வந்தனன் தூதே; நீயும் 

புல்லார் புரவி வல்விரைந்து பூட்டி

நெடுந்தேர் ஊர்மதி வலவ

முடிந்தன்று அம்மநாம் முன்னிய-
                                                     வினையே.

                          -மதுரை மள்ளனார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளையின் சுற்றளவு, பரப்பளவு மற்றும் கன அளவு formula | cylinder

வட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவிர்க்கான சூத்திரம் | area and circumference formula of circle

கனசதுரத்தின் மொத்த புறப்பரப்பு, பக்கப் பரப்பு, மூலைவிட்டம் மற்றும் கன அளவுகளின் formula|cube's volume, total surface area and lateral surface area and diagonal formula