திரிகடுகம் | thirikadukam
திரிகடுகம்
திரிகடுகம் பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று ஆகும். இன்னூலை எழுதியவர் நல்லாதனார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் திருத்து என்னும் ஊரை சேர்ந்தவர். நல்லாதனார் வைணவ சமயத்தை சேர்ந்தவர். "செரு அடுதோள் நல்லாதன் " என்ற மற்றொரு பெயரும் இவருக்கு உண்டு. திரி என்றால் மூன்று என்று பொருள். கடுகம் என்றால் காரமுடைய பொருள் ஆகும். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருளால் ஆன மருந்தின் பெயர் திரிகடுகம் ஆகும். சுக்கு, மிளகு, திப்பிலி ஆன மருந்து பொருள் உடல் நோயை தீர்க்கும். திரிகடுகம் ஒவ்வொரு பாடலிலும் உள்ள மூன்று கருத்துகளும் மக்களில் அறியாமையை நீக்கும் என்பது இதன் பொருள்.
செரு அடுதோள் நல்லாதன் என பாயிரம் குறிப்பிடுவதால் இவர் ஒரு போர் வீரராக இருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இன்னூலின் ஒவ்வொரு பாடலிலும் மூன்று மூன்று கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இன்னூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் "இம்மூன்று (அ ) இம்மூவர்" என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இன்னூல் "அம்மை " என்னும் வனப்பு வகையை சார்ந்தது.
திரிகடுகம் - சில பாடல்கள் :
" உண்பொழுது நீராடி உண்டலும்
- என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலும்
- தோல்வற்றிச்
சாயினும் சான்றாண்மை குன்றாமை
- இம்மூன்றும்
தூஉயர் என்பார் தொழில். "
"இல்லார்க்கோன் றீயும் உடைமையும்
- இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும்
-எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும்
- இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க் குள."
"முறைசெய்யான் பெற்ற தலமையும்
- நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும்
-நிறைஒழுக்கம்
தோற்றாதான் பெற்ற வனப்பும்
- இவைமூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து."
திரிகடுகம் - மேற்கோள் வரிகள் சில :
" நெஞ்சம் அடங்குதல் வீடாகும் "
"வேளாளன் என்பான் விருந்திருக்க
-உண்ணாதான் "
"தாளாளன் என்பான் கடன்பட
- வாழாதான் "
"நிறை நெஞ்சம் உடையானை
-நல்குரவு அஞ்சும்"
"கொண்டான் குறிப்பரிவாள்
-பேண்டாட்டி "
கருத்துகள்
கருத்துரையிடுக