புறநானூறு | puranaanooru

   புறநானூறு

     
          சங்க இலக்கியங்கள் என அழைக்கப்படும் நூல்கள் பாத்துப்பாட்டும், எட்டுதொகையும் ஆகும்.  சங்க இலக்கியங்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது.   அந்த எட்டுதொகை நூலில் உள்ள எட்டு நூல்களில் புறம் பற்றி கூறும் முதன்மையான நூல் புறநானூறு ஆகும்.  புறம் + நான்கு +நூறு = புறநானூறு  ஆகும்.  புறத்திணைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு புறநானூறு நூல் ஆகும்.  இன்னூலில் மொத்தம் நானூறு பாடல்கள் உள்ளன.  இன்னூல் நூற்று ஐம்பதெட்டு (158 புலவர்கள் ) புலவர் மக்களால் பாடப்பட்ட நூல் ஆகும்.  இன்னூல் அகவற்பா ( ஆசிரியப்பா ) என்னும் பா வகையால் ஆன நூல்.  இன்னூலை புறம் எனவும் புறப்பாட்டு எனவும் தமிழர் கருவூலம் எனவும் வேறு பெயர்கள் கொண்டும் அழைப்பர்.  இன்னூலுக்கு கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் "பாரதம் பாடிய பெருந்தேவனார் " ஆவார்.  இன்னூலை ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு  செய்துள்ளார்.   புறநானூறு நூலில் உள்ள பாடல்களின் அடிகள் 4 அடி சிறுமையும்,40 அடிகள் வரை பெரியனவாகவும் இருக்கும்.   புறம் என்றால் " மறம் செய்தலும் அறம் செய்தலும் ஆகும் ".

        புறநானூற்று நூலின் மூலம் பண்டைய கால தமிழ் மன்னர்களின் அறம், வீரம் , கொடை, ஆட்சி சிறப்பு, கல்வி வளர்ச்சி, நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் முதலியவற்றை சிறப்பாக எடுத்து கூறுகிறது.  தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளை கூறும் நூல் புறநானூறு. 

     புறநானூற்று பாடல்கள்
     1. வெட்சி
     2. கரந்தை
     3. வஞ்சி
     4. காஞ்சி
     5. நொச்சி
     6. உழினை
     7. தும்பை
     8. வாகை
     9. பாடாண்
    10. பொதுவியல்
    11. கைக்கிளை
    12. பெருந்திணை
                               -என்ற பன்னிரு புறத்திணைகளுக்குரிய துறைப்பொருளை கொண்டுள்ளது.  புறநானூற்றில் 11 புறத்திணைகளும் 65 துறைகளும் உள்ளன.  மூவேந்தர்கள், குறுநில மன்னர்கள், வேளிர், போர், கையறு நிலை, நடுகல் போன்றோர்கள் பற்றி சிறப்பாகவும் விரிவாக்கவும் பாடல்கள் மூலம் கூறும் நூல் இன்னூல்.  போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வைக்கப்படுவது நடுகல் ஆகும்.  அவ்வாறு போரில் வீரமரணம் அடைந்த வீரர்கள் மற்றும் அவர்களுக்கு வைக்கப்பட்ட நடுகல் பற்றிய செய்திகளை அதிகம் கூறுகிறது.  புறநானூறு முதன்முதலில் உ. வே. சாமிநாதர் அவர்களால் கி. பி 1894 ஆண்டு ஆச்சில் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தது.  புறநானூற்றில் அதிக பாடல்கள் பாடியவர் ஔவையார் ஆவார்.  ஔவையார் சங்ககால பெண்பால் புலவர்களில் முக்கியமான ஒருவர் ஆவார்.  ஔவையார் வள்ளல் அதியமானின் அவை புலவர் ஆவார்.  

புறநானூற்றில் உள்ள சில பாடல்கள் :

1. " நெல்லும் உயிரன்றே; நீரும்உயி-
                                                      ரன்றே ;
       மன்னன் உயிர்த்தே மலர்தலை-
                                                       உலகம் ;
       அதனால் யான்உயிர் என்பது -
                                                       அறிகை
        வேன்மிகு தானை வேந்தற்குக் -
                                                      கடனே "
                           
                                                 -மோசிகீரனார்

2. "தெண்கடல் வளாகம் பொதுமை -
                                                  இன்றி
      வெண்குடை நிழற்றிய  ஒருமை -
                                                    யோர்க்கும்
      நடுநாள் யாமத்தும் பகலும்-
                                                    தூஞ்சான்
      கடுமாப் பார்க்கும் கல்லா-      
                                                     ஒருவற்கு
      உண்பது நாழி உடுப்பவை -
                                                    இரண்டே
     பிறவும் எல்லாம் ஓர்ஒக் கும்மே
    
     செல்வத்துப் பயனே ஈதல்

     துய்ப்பேம் எனினே தப்புந பலவே "

                                  - நக்கீரர்.

3. "பொன்னும் துகிரும் முத்தும்-
                                                     மன்னிய
       மாமலை பயந்த காமரு மணியும்
     
     இடைப்படச் சேய ஆயினும் தொடை
                                                          புணர்ந்து
       அருவிலை நன்கலம்  அமைக்கும் -
                                                       காலை
      ஒருவழித் தோன்றி யாங்கு -
                                        என்றும் சான்றோர்
      சான்றோர் பாலர் ஆப

      சாலார் சாலார் பாலார் ஆகுபவே "
        
                                 - கண்ணகனார்.

4. " அறுகுளத் துகுத்து மகல்வயற் -
                                                 பொழிந்தும்
       உறுமிடத் துதவா துவர்நில-
                                                 மூட்டியும்
       வரையா மரபின் மாரி போலக்

       கடாஅ யானைக் கழற்கால் பேகன்

       கொடைமடம் படுத லல்லது

        படைமடம் படான்பிறர் படைமயக்-
                                                       குறினே."
 
                                   -பரணர்.

புறநானூற்றில் உள்ள சில சிறந்த அடிகள் :

1. " உண்டி கொடுத்தோர் உயிர்
                                              கொடுத்தோரே
       உண்பது நாழி ;உடுப்பவை
                                              இரண்டே "

                                  - குடப்புலவியனார்.

2. " யாதும் ஊரே யாவரும் கேளிர் "
   
    "தீதும் நன்றும் பிறர்தர வாரா "

                    -கணியன் பூங்குன்றனார்.

3. " அறநெறி முதற்றே அரசின்
                                                    கொற்றம் "

                    - மதுரை இளநாகனார்.

4. "அறவை ஆயின் நினதுஎனத்
                                              திறத்தல்
      மறவை ஆயின் போரொடு
                                              திறத்தல் "
                            
                                       - கோவூர்க்கிழார்.

5. " நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றே ;

       அவலாகு ஒன்றோ ;மிசையாகு
                                                   ஒன்றோ ;
       எவ்வழி நல்லவர் ஆடவர்

      அவ்வழி நல்லை ;வாழிய நிலனே!"

                         -ஔவையார்.


     
  
            

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளையின் சுற்றளவு, பரப்பளவு மற்றும் கன அளவு formula | cylinder

வட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவிர்க்கான சூத்திரம் | area and circumference formula of circle

கனசதுரத்தின் மொத்த புறப்பரப்பு, பக்கப் பரப்பு, மூலைவிட்டம் மற்றும் கன அளவுகளின் formula|cube's volume, total surface area and lateral surface area and diagonal formula