ஐந்து மூலிகைகளின் தொகுப்பு சிறுபஞ்சமூலம் | sirupanjamoolam in pathinenkeel kanakku

  சிறுபஞ்சமூலம்

     பதினெண்கீழ்கணக்கு நூலகளில் 18 நூல்கள் உள்ளன.  அந்த 18 நூல்களில் சிறுபஞ்சமூலமும் ஒன்று.இன்னூல் "வெண்பா" என்னும் பாவகையால் ஆனது.  இன்னூலில் மொத்தம் கடவுள் வாழ்த்து பாடலுடன் 97 வெண்பாக்கள் உள்ளன.  சிறுபஞ்சமூலத்தை இயற்றியவர் காரியாசன் புலவர் ஆவார்.  " மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் "என்ற சிறப்பு பெயராலும் அழைக்கப்படுகிறார் என் சிறப்புப்பாயிரத்தில் கூறப்பட்டுள்ளது.
இவருக்கு மாக்காரியாசன் என்ற மற்றொரு சிறப்பு பெயரும் உண்டு.   காரியாசனும் கனிமேதாவியாரும் ஒரே கல்வி சாலையில் கல்வி பயின்றவர்கள் ஆவர்.  இவர் சமண சமயத்தை சேர்ந்தவர். 

  • கண்டங்கத்தரி
  • சிறுவழுத்துணை
  • சிறுமல்லி
  • பெறுமல்லி
நெருஞ்சி ஆகிய ஐந்து மருத்துவ குணமிக்க தாவரத்தின் வேர்களும் மக்ககளின் உடல் நோய்களை அகற்ற பயன்படுத்தப்பட்டது.  அதுபோல இந்த சிறுபஞ்சமூலத்தில்  ஒவ்வொரு பாடலிலும் ஐந்து ஐந்து அறக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.  இந்த ஐந்து அறக்கருத்துக்களும் மக்களிடம் உள்ள அறியாமை என்னும் நோயை அகற்ற உதவுகிறது.  எனவே தான் இன்னூலுக்கு சிறுபஞ்சமூலம் என பெயர் பெற்றது.  இந்த ஐந்து தாவத்தின் மருத்துவ தன்மையை  உவமையாக கூறி நூல் பெயர் வந்ததால் இன்னூல் " மருந்தால் பெயர் பெற்ற நூல் " எனவும் கூறப்படுகிறது.  இன்னூலில் பெரும்பான்மையான கருத்துக்கள் மக்களுக்கு புத்தி கூறும் பொதுவான அறக்கருத்துக்கலாகவே கூறப்பட்டுள்ளது.   மிக குறைந்த அளவு கருத்துக்கள் மட்டுமே சமண அறக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
தோல் கன்றைக் காட்டி பசுவை கறக்கும் பழக்கம் கொடியது என்று இன்னூல் கூறுகிறது.  சிறுபஞ்சமூலத்தில் இருந்து ஒரு பாடல் பின்வருமாறு,

"கண்வனப்புக்  கண்ணோட்டம்-
                      கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு  இத்துணையாம் -
               என்றுரைத்தல் - பண் வனப்புக்
கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன்-
                                                      தன்னாடு
வாட்டான் நன் றென்றல்  வனப்பு."

        இப்பாடலில்  கண்ணுக்கு அழகு பிற உயிர்கள் மீது இரக்கம் கொள்வது எனவும், காலுக்கு அழகு பிறரிடம் இறந்து இரந்து (யாசித்து ) செல்லாமை எனவும் ஆராய்ச்சிக்கு அழகு தன்னுடைய முடிவை துணிவுடம் கூறுதல் எனவும் இசைக்கு அழகு இசையை கேட்போர் நன்றாக உள்ளது என உறைத்தல் எனவும் அரசனுக்கு அழகு குடிமக்களை வருந்த வைக்காமல் மகிழ்வுடன் காப்பவன் எனவும் கூறப்பட்டுள்ளது.  இப்பாடலில் ஐந்து நல்ல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. 

சிறுபஞ்சமூலத்தில்  உள்ள சில வரிகள் :

"நூற்கு ஐயைந்த சொல்லின் -     
                                         வனப்பே வனப்பு "

"பேதைக்கு உரைத்தாலும் செல்லாது -
                                                      உணர்வு "

"படைதனக்கு யானை வனப்பாகும் "

"சொல்லின் வனப்பே வனப்பு "

 வனப்பு  என்பதன் பொருள் "அழகு "
   


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளையின் சுற்றளவு, பரப்பளவு மற்றும் கன அளவு formula | cylinder

வட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவிர்க்கான சூத்திரம் | area and circumference formula of circle

கனசதுரத்தின் மொத்த புறப்பரப்பு, பக்கப் பரப்பு, மூலைவிட்டம் மற்றும் கன அளவுகளின் formula|cube's volume, total surface area and lateral surface area and diagonal formula