முடி கொட்டுவதை தடுக்க வழிகள் உள்ளது கவலைபடாதீர். | hair fall solutions in tamil

 முடி உதிர்வு பிரச்சனைக்கான தீர்வுகள்


      ஒருவருடைய அழகை உயர்த்தி காட்டுவத்தில் அவருடைய முடியானது முக்கிய பங்கு வாகிக்கிறது.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான ஸ்டைலான தோற்றத்தில் முடியை வாரி தன்னை அழகுபடுத்தி கொள்கின்றனர்.  எங்கு கண்ணாடியை பார்த்தாலும் முதலில் சரி செய்வது முடியை தான்.  இவ்வாறு முடியை உயிரென பார்ப்பவர்களுக்கு உள்ள முக்கியமான பிரச்சனை எதுவென்றால் அது முடி உதிர்வு.  ஒவ்வொரு முறை தலை சீவும்போதும் கொட்டும் முடியை பார்த்து வருந்துபவர்கள் அதிகம்.  இது அவர்கள் அழகையே கெடுத்து விடுகிறது.  பொது இடங்களில் நடக்கும் போது கூட கூச்சமுடனும் வெட்கத்துடனும் நடக்கும் நிலை ஏற்படுகிறது. 

        முடி உதிர்வுக்கு பல காரணங்கள் உண்டு.  அவற்றில் சிலவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். ஆனால் சில இயற்கையாக உள்ளவை. அவற்றை நம்மால் தவிர்க்க முடியாது.  நாம் தினமும் காலை முதல் மாலை வரை சுமார் 30 முதல் 50 வரை எண்ணிக்கையிலான முடிகளை இழக்கிறோம்.  அன்றாடம் ஏற்படும் சுற்று சூழல் மாறுபாடு, மரபியல் ரீதியாக, ஊட்டச்சத்து குறைபாடு, ஹோர்மோங்கள் போன்ற காரணங்களால் முடி உதிர்வு அதிகம் ஏற்படுகிறது.  மேலும் தொப்பிகள் அணிவது, வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிவது, ஒரு நாளில் பலமுறை தலை வாரிக்கொண்டு இருப்பது,  முறையாக தலை வாராமல் முடியை தன் இஷ்ட்டத்திற்கு ஏர்ப்ப சீவுவது போன்றவற்றாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது.

      மேலும் முடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பலவிதமான ஷாம்பு போட்டு குளிப்பதாலும். முடியின் மேற்பகுதி பாதிப்பு அடைகிறது.  சிலவித  ஜெல் போன்ற பொருள்களை தடவுவதாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.  மேலும் தலைக்கு குளிக்காமல் இருப்பதாலும்,  சரியாக சீவி பராமரிக்காமல் இருப்பதாலும் கூட முடி கொட்டுதல் ஏற்படுகிறது. இவ்வாறு முடி கொட்டுதல் பாதிக்கும் போது அதை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும்.  உங்கள் மருத்துவரை அணுகி அவரின் சரியான வழிகாட்டுதலின் படி நடந்துகொள்ள வேண்டும்.  முடி கொட்டிய பின் வருத்தப்படுவத்தில் பயனில்லை.  முடி உதிர்த்தல் பிரச்சனையில் தாமதம் செய்யவே கூடாது. 

முடி உதிர்வுக்கான காரணங்கள் :

1. மரபியல் (Genetics ) ரீதியாக முடி உதிர்தல் :

        இந்த முறையில் அதிக பேர் பாதிக்கப்படுகின்றனர்.  இந்த முறையில் அவர்கள் பரம்பரக்கே முடி உதர்தல் பிரச்சனை இருக்கும்.  அதாவது ஒருவரின் தாத்தாவிற்கு முடி உதிர்தல் பிரச்சனை இருந்தால் அது அவருடைய அப்பாவிற்கு கடத்தப்பட்டு பின்னர் அவரையும் வந்தடையும்.  இது தவிர்க்க முடியாது.  கட்டுப்படுத்துவது கடினம்.  "ஆன்ட்ரோஜீனிக் அலோபேசியா " என்பது முடி உதிர்தல் தொடர்புடையது.  இது ஆண்களை பாதித்தால் அவருக்கு வழுக்கை உண்டாகிறது.  இது பெண்களை பாதித்தால் அவர்கள் முடி மிகவும் தடிமனாக இருக்கும்.


2. வயது

     முடி உதிர்வுக்கு வயதும் கூட முக்கிய காரணம் ஆகும்.  வயது ஆக ஆக முடியின் வளர்ச்சியும் குறைகிறது.  முடி உதிர்வதும் அதிகரிக்கிறது.  முடி வளரும் துளைகளும் மூடி கொள்கின்றன.  முடியின் நிறமும் மாறுகிறது.

3.  முடியை பராமரித்தல் :

      உடலின் மற்ற பகுதிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பாதுக்காக்கிறோமோ அதேபோல் முடிக்கும் மருத்துவ பராமரிப்பு செய்தும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளித்தும் எண்ணெய் வைத்தும் பராமரிக்க வேண்டும்.  இவ்வாறு செய்யாமல் இருந்தால் முடி உதிரும்.

4.  மகிழ்ச்சியான வாழ்க்கை :

      சந்தோசமாக இருப்பதும் கூட முடி வலிமையாக இருக்க உதவுகிறது.  ஒருவர் சந்தோசமாகவும், டென்ஷன் மற்றும் கவலைகள் இல்லாமல் இருப்பதால் முடி உதிர்வது குறைகிறது.  முடிக்கு வலிமை சேர்க்கிறது.  டென்ஷன் மற்றும் கவலைகள் போன்ற காரணங்களாலும் கூட முடி உதிருகிறது.  முடி உதிர்வை பற்றி கவலை பட்டால் கூட முடி உதிரக் கூடும்.  எனவே கவலை படாமல் சந்தோசமாக இருப்பதும் கூட ஒரு மருத்துவம் தான்.

5.  ஸ்டைலாக முடியை சீவிகொள்வது :

     தற்போது உள்ள முடி உதிர்வுக்கு முக்கியமான காரணம் எதுவெனில் முடிய நமது விருப்பத்திற்கு ஏர்ப்ப சீவுவது.  மேலும் முடியை பிடித்து இழுப்பது போன்றவற்றாலும் முடி கொட்டுகிறது.  டிராக்சன் அலோபேசியா என்பது முடிக்கொட்டும் ஒரு நோய் ஆகும்.  இது வந்தால் கட்டுக்கடங்காமல்  முடி கொட்டும்.  மேலும் முடி வெட்டும் போது பயர் கட்டிங் போன்றவை செய்வது, சுருட்டை முடியை நேராக்குவது, நேரான முடியை சுருட்டை ஆக்குவது போன்றவற்றால் முடி உதிர்கிறது.  உங்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டு வடு இருந்தாலும் அந்த இடத்தில் முடி முளைக்காது.  வடு ஏற்பட்டால் அது நிரந்தரமானது. 

6.  சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் மாறிவரும் காலநிலைகள் :

        அன்றாடம் சுற்றுசூழல் மாசுபட்டு கொண்டே வருகிறது.  இதனால் காற்று, நீர், நிலம் போன்றவை அதிகமாக பாதிப்புக்கு உட்படுகிறது.  இதனால் உச்சந்தலையில் அதிகமாக முடி உதிர்வது, பொடுகு ஏற்படுவது, தலையில் அரிப்பு உருவாவது ஆகியவை வருகின்றன.  இதுவும் கூட முடி கொட்டுவதற்கு முக்கிய காரணம் ஆகும். 

     மேலே உள்ளவை முடி கொட்டுவதற்கான முக்கிய காரணங்கள் ஆகும்.  உங்களுக்கு முடி கொட்டுவது குறைவாக இருந்தால் நீங்கள் உங்களுக்கு தெரிந்த பாதுகாப்பான பின் விளைவுகள் இல்லாத சில மருத்துவத்தை பின்பற்றலாம்.  மேலும் மேலே கூறப்பட்டவற்றை குறைத்து கொள்ள வேண்டும்.  ஆனால் பாதிப்பு அதிகம் இருந்தால் அதாவது,  உங்களுக்கு ஒரு நாளைக்கு 100 முதல் அல்லது அதற்கு மேல் முடி கொட்டினாலோ, வாழுக்கை உண்டானாலோ உங்கள் தோல் மருத்துவரை சந்தித்து அவரின் வழிகாட்டுத்தல்களை  பின்பற்ற வேண்டும். இந்த நிலை வந்த பின் நீங்களாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம்.

முடி உதிர்வை தடுக்கும் சில வழிகள் :


1. உச்சந்தலையில் எண்ணெய் மசாச் :

      உச்சந்தலையில் தலையில் எண்ணெய் மசாச் செய்வது முடி உதிர்விற்கு நல்ல பலனை தருகிறது.  இதை ஒரு முறையுடன் நிறுத்தி விடாமல் பல முறைகள் செய்ய வேண்டும்.  இது உங்கள் தலையில் மீண்டும் புதிய முடி வளர தூண்டுக்கிறது.  இந்த மசாச் செய்யும் போது லெவண்டருடன் பாதம் சேர்த்து கொள்வது நல்ல பலனை தரும். 

2.  ஈரமான தலையுடன் தலை சீவுவதை தவிர்த்தல் :

     உங்கள் தலை முடி ஈரமாக இருக்கும் போது தலை சீவுதல் கூடாது.   ஏனென்றால் உங்கள் முடி ஈரமாக இருக்கும் போது வலிமை அற்ற நிலையில் இருக்கும்.  எனவே அப்போது தலை வாரினால் முடி கொட்டி கொண்டே இருக்கும்.  இவ்வாறு ஈரமான நிலையில் சீவ வேண்டும் எனில் பெரிய இடைவெளிகளை கொண்ட சீப்பை கொண்டு சீவ வேண்டும்.  மேலும் அடிக்கடி முடியை சீவிக்கொண்டே இருக்க கூடாது.   இது முடியை வலு இழக்க செய்கிறது.  முடியை கையால் சீவுவது இன்னும் சிறந்தது.

3. அதிக தண்ணீர் குடித்தல் :

     முடியின் தண்டு பகுதி அதிக நீரை கொண்டுள்ளது.  யாருக்கு நீர் சத்து அதிகம் இருக்கிறதோ அவரின் முடி வளர்ச்சி செழிப்பாக இருக்கும்.  எனவே ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்து உடலின் நீர் சத்தை அதிக படுத்த வேண்டும்.  இதனால் உங்கள் முடி நன்கு வளரும்.

4.  க்ரீன் டீ யை தலையில் தடவுதல் :

     ஆராய்ச்சிகளின் முடிவின் படி தலையில் க்ரீன் டீ தடவுவதன் மூலம் முடி உதிர்தல் கட்டுப்படுத்தப் படுகிறது.  இரண்டு பாக்கெட் க்ரீன் டீ தூளை எடுத்து கொண்டு அதை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.  பின்னர் ஆரிய பிறகு தலையில் தேயித்து கொள்ள வேண்டும்.  ஒரு மணிநேரம் கழித்து கழுவ வேண்டும்.  இதை பத்து நாட்கள் தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

5. மது அருந்துவதை தவிர்த்தல்(அல்ககள் DRINKING):

      மது அருந்தவது கூட முடி உதிர்வுக்கு காரணம் ஆகும்.  அது முடியின் வளர்ச்சியை குறைக்கிறது.  எனவே மது அருந்துவதை குறைத்தல்  அல்லது முற்றிலும் தவிர்த்தல் மூலம் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

6. புகைப்பிடித்தலை தவிர்த்தல் (AVOID SMOKING):

     புகை பிடிப்பது கூட முடி உதிர்வுக்கு வழி செய்கிறது.  அதாவது அதிகம் புகை பிடிப்பதால் நம் உடலில் ரத்தத்தின் அளவு குறைகிறது.   இதனால் உச்சந்தலைக்கு செல்லும் ரத்தித்தின் அளவு போதுமானதாக இல்லை.  இதனால் போதுமாக சத்துக்கள் முடி வளரும் பகுதிக்கு கிடைப்பதில்லை.  முடி சொர்வடைந்து கொட்ட செய்கிறது.



7.  உடற்பயிற்சி செய்தல் :

     தினமும் முப்பது நிமிட உடற்பயிற்சி அனைவருக்கும் அவசியமான ஒன்று.  உடலில் ஏற்படும் 90% சதவீத நோய்க்கு உடற்பயிற்சி செய்யாததே காரணம் ஆகும்.   உடற்பயிற்சி செய்வதே அதற்கு தீர்வாகவும் அமைகிறது.  இது முடி உதிர்வுக்கும் பொருந்தும்.  உடற்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள ஹார்மோன்களின் அளவு சமநிலை அடைகிறது.  எனவே தினமும் நடப்பது, ஓடுவது,  நீச்சல் நீந்துவது,  சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது.  இது மேலும் மன உழைச்சளை குறைக்கிறது.

8. புரதம் (protein )அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் :

     முடி பற்றிய பிரச்சனைகளுக்கு புரதம் மிகவும் அவசியம்.  புரதமே முடி வளர்ச்சி, புதிய முடி உருவாதல் போன்ற செயல்பாடுகளுக்கு  மிகவும் அவசியமான ஒன்று.  நமது உடலில் புரதத்தின் அளவு குறையும் போது முடி வலு இழந்து கொட்டுகிறது.  மேலும் புதிய முடியும் உருவாவது இல்லை. இந்த பிரச்சனையை தவிர்க்க நமது உடலில் புரதத்தின் அளவை கூட்ட வேண்டும்.   அதற்கு நாம் புரதம் அதிகம் உள்ள உணவு பொருள்களை எடுத்துக்கொள்வது அவசியம்.  அதாவது முட்டை, கோழி இறைச்சி, பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ், பால், கோட்டை வகைகள் போன்றவற்றில் அதிகபடியான புரதம் உள்ளது.  இதனை உண்பதால் நமது உடலில் புரதத்தின் அளவை கூட்டலாம்.  முடி நன்கு வளர்வதற்கு புரதம் ஒரு முக்கியமான பொருள் ஆகும்.

9. முடியை heating முறையில் உலருத்துவத்தை தவிர்த்தல் :

       முடியை அடிக்கடி உலர்த்தும் முறையை முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும்.  இப்படி முடியை உளர்த்துவதால் முடியில் உள்ள புரதத்தின் அளவு குறைகிறது.  இந்த உளர்த்துதலை அடிக்கடி செய்வதால் மேலும்மேலும் புரதம் குறைந்து கொண்டே இருக்கிறது.  இதனால் முடி உதிர்ந்து கொண்டே இருக்கிறது.  எனவே முதல் வேலையாக முடியை heating முறையில் அடிக்கடி உலர்த்துவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.


10. தலையில் வியர்வை வடிவத்தை தவிர்த்தல் :

     கோடை காலம் வந்தாலே அதிகபடியான வெப்பம் வாட்டும்.  இந்த வெப்பதினால் அதிகமான வியர்வை உடலில் இருந்து வெளியேறுகிறது.  தலையில் இருந்தும் வியர்வை வெளியேறுகிறது.  இதனால் அரிப்பு தலையில் ஏற்பட்டுகிறது.  இதுவும் முடியை உதிர செய்கிறது.  இதனை தவிர்க்க தலையில் வியர்வை ஏற்படாதவாறு  குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.  கற்றாலை, வேப்ப இலை கொண்டு தலையில் பூசி குளித்து தலையை குளுமை படுத்திக் கொள்ள வேண்டும்.  அல்லது பின் விளைவுகள் அற்ற மற்ற குளுமை தரும் பொருள்களையும் பயன்படுத்தலாம்.


11. வேதி பொருள்களை(Chemicals) பயன்படுத்தும் போது பாதுகாப்பு :

   ஒரு வேலை நீங்கள் வேதி பொருள் உள்ள இடங்களில் வேலை செய்கிறீகள் எனில் அந்த வேதி பொருள்கள் உங்கள் முடியில் படாதவாறு பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.  உங்கள் முடிக்கு பாதுகாப்பு உரறயை போட்டுக்கொள்ளுதல் அவசியம்.  வேதி பொருளுடன் கூடிய உங்கள் கைகளால் முடியை தொட கூடாது.  நன்கு கைகளை சுத்தமாக கழுவி கொண்ட பிறகே தொட வேண்டும்.   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளையின் சுற்றளவு, பரப்பளவு மற்றும் கன அளவு formula | cylinder

வட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவிர்க்கான சூத்திரம் | area and circumference formula of circle

கனசதுரத்தின் மொத்த புறப்பரப்பு, பக்கப் பரப்பு, மூலைவிட்டம் மற்றும் கன அளவுகளின் formula|cube's volume, total surface area and lateral surface area and diagonal formula