சர்க்கரை நோயா? இனி கவலை வேண்டாம்

 ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் வழிகள்


     ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதே சர்க்கரை நோய் ஆகும்.  இது இப்போது நம்மில் பெரும்பாலோனோற்கு உள்ள நோய் ஆகும்.  இதற்கு காரணம் தற்போது உள்ள உணவு முறையே ஆகும்.  நாவடக்கம் இல்லாத காரணத்தால் இன்று இப்படி அவதிப்பட்டு கொண்டு இருக்கிறோம்.   மருத்துவமனையில் பணத்தை விரையம் செய்கிறோம்.  பாடுப்பட்டு உழைத்து சேர்த்த பணத்தை ஏன் வீனே செலவு செய்ய வேண்டும்.  நாவடக்கமும் நாள்தோறும் உடற்பயிற்சியும் செய்தால் இந்த பணத்தை சேமிக்கலாம்.  பணம் செமிப்பது அல்லாமல் ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடன் இருக்கலாம்.

     கணயத்தில் சுரக்கும் ஹார்மோன் இன்சுலின் ஆகும்.  இதன் சுரப்பு குறையும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு படிப்படியாக உயருகிறது.  இது சர்க்கரை நோய் ஆகும்.  இன்சுலின் ரத்தத்தில் குளுக்கோஸ் சர்க்கரையை உடைத்து உடலுக்கு தேவையான சக்தி உருவாகிறது.  இதன் சுரப்பு குறையும் போது உடைக்கப்படாத குளுக்கோஸ் சர்க்கரை சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.  குளுக்கோஸ் கலந்த சிறுநீரால் கடுமையான துருநாற்றம் வெளியேறும்.  இந்த துன்பத்தில் இருந்து வெளியேற சில எளிமையான வழிகள் பின்வருமாறு.

1.   கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவை உண்பதை குறைத்தல்.

      ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க விரும்புவர் முதலில் செய்ய வேண்டிய வேலை கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவை உண்ணுவதை குறைக்க வேண்டும்.  ஏனெனில் கார்போஹைட்ரேட்டில் அதிக அளவு குளுக்கோஸ் உள்ளது.  இந்த வகை உணவை உண்ணுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயருகிறது.  எனவே கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவை உண்பதை குறைத்து கொள்ளுதல் மிகமிக அவசியம் ஆகும்.

2. சர்க்கரை அதிகம் உள்ள உணவை தவிர்த்தல்.


     இனிப்பு பண்டங்கள் உண்பதை குறைத்து கொள்ள வேண்டும்.  இனிப்பு உணவுகளில் அதிகபடியான  சர்க்கரை உள்ளதால் அவை ரத்தத்தில் உண்ட சில நிமிடங்களில் சர்க்கரையின் அளவை உயர்த்தி விடும்.  இனிப்பான பொருள்களைன டீ, காபி மற்றும் இதர இனிப்பான பண்டங்களை தவிர்த்தல் வேண்டும்.  டீ மற்றும் காபியில் சர்க்கரை அளவை குறைவாக போட்டு குடிக்க வேண்டும்.

3. நார் சத்துக்கள் நிறைந்த உணவை உண்ண வேண்டும்.


      நார் சத்துக்கள் நிறைந்த உணவுகளே உடலுக்கு வலிமை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் ஆகும்.  நார் சத்து உடலை கட்டுக்கோப்புடன் வைக்கிறது.  மேலும் இது சர்க்கரை அளவையும் ரத்தத்தில் கட்டுப்படுத்த உதவுகிறது.  நார் சத்து நிறைந்த உணவுகளான கீரை வகைகள், காய்கறிகள், சிறு தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளுதல் வேண்டும்.  சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு நார் சத்து மிகவும் அவசியம்.

4. உடல் எடை பராமரிப்பு.


      உடல் எடையை ஒரு நிலையான எண்ணிக்கையில் வைத்து கொள்ள வேண்டும்.  திடீரென உடல் எடை உயருவது மற்றும் குறைவது பாதிப்பை ஏற்படுத்தும்.  அதிக அளவு உடல் எடை ஆபத்து.  மிக குறைவான எடை உடல் வலிமை இல்லாமல் இருக்கும்.  ஒரு மிதமான எடையே உடலின் அனைத்து செயல்களும் ஒழுங்காக அமைய வழி வகுக்கும்.

4.  பாதி அளவு உணவு உண்ணுதல்.


     உண்ணும் உணவின் அளவில் கவனம் தேவை.  எப்போது உண்ணுதல் போல் இல்லாமல் உணவின் அளவை பாதியாக குறைத்து கொள்ளுதல் வேண்டும்.  உணவு எடுத்துக்கொள்ளமல் இருத்தல் கூடாது.  அது உடலை வலு இழக்க செய்து மற்ற நோய்க்கு வழி வகுக்கும்.  உணவின் அளவை பாதியாக குறைப்பதன்  மூலம் உடலுக்கு தேவையான சக்தி பாதியளவு உணவின் மூலமும் மீதம் பாதி உடலில் உள்ள அதிகபடியான சர்க்கரையில் இருந்தும் எடுத்துக்கொள்ள படுகிறது.  இப்படி செய்வதன் மூலம் பக்க விளைவுகள் இன்றி உடல் எடையை குறைக்கலாம்.

5. நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல்.


     நாள்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்வது சர்க்கரை நோயாளிக்கு மிக மிக முக்கியமான ஒன்றாகும்.  நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதால் இன்சுலின் ஹார்மோன் சுரப்பு படிப்படியாக உயர தொடங்குகிறது.  இந்த ஹார்மோனை தசைகள் அதிக அளவில் பயன்படுத்தி குளுக்கோஸை உடைத்து ஆற்றலாக மாற்றுகிறது.  உடற்பயிற்சி நீண்ட காலம் செய்து வர விரைவாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையந்து விடுகிறது.

6. நீர் குடித்தல்.


     தண்ணீர் குடித்தல் கூட சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. குடித்த தண்ணீர் அளவை விட உடலில் இருந்து வெளியேறிய தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பின் ரத்தத்தில் நீரின் அளவு குறைவதால் சர்க்கரை அளவு உயர்கிறது.  ஆதலால், தண்ணீரை ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்க வேண்டுமோ அதனை சரிவர குடிக்க வேண்டும்.  வெயில் காலங்களில் சற்று அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லது.  இவ்வாறு தண்ணீர் பொருள்களை எடுத்துக்கொள்ளும் போது பழச்சாறு மற்றும் சோடா குளிர்பானங்களை குடிக்க கூடாது.  அவை குளுக்கோஸ் சத்து நிறைந்தவை.  அவை சர்க்கரை அளவை உயர்த்தி விடும்.

7. மூலிகை பொருட்கள் பயன்படுத்தும் போது டாக்டரிடம் ஆலோசனை கேட்டு பயன்படுத்துதல்.


     சிலர் மூலிகை பொருட்கள் எடுத்து கொள்வதன் மூலம் சர்க்கரை அளவை குறைக்க முயலுக்கின்றனர்.  இதில் தவறு ஒன்றும் இல்லை.  ஆனால் அந்த மூலிகை நம் உடம்புக்கு தகுந்தவை தானா என டாக்டரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.  ஏனெனில் சில மூலிகை உங்கள் உடம்பிற்கு நல்ல பலனை அளிக்கலாம்.  ஒரு சில மூலிகைகள் உடலில் பக்க விளைவுகளை உண்டாக்கக்கூடும்.  எனவே மருத்துவரின் ஆலோசனைவுடன் பயன்படுத்த வேண்டும்.

8.  மன அழுத்தத்தை குறைத்தல்.


    மன அழுத்தம் கூட ரத்தத்தில் சர்க்கரை அளவை உயரவதற்கு வழிவகுக்கிறது.  மன அழுத்தம் ஏற்படுவதால் சில ஹார்மோன்கள் சுரக்கின்றன.  இந்த ஹார்மோன்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்துகின்றன.  எனவே மன அழுத்தத்தை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.  மன அழுத்தம் ஏற்படும் போது அதனை குறைக்க உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவை செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.  மேலும் உடலுக்கு தேவையான ஓயிவை கொடுத்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

9. நன்றாக தூங்குதல்.


     ஒவ்வொரும் அவர்களின் உடலுக்கு தேவையான உறக்கத்தை அளித்தல் வேண்டும்.  நன்றாக உறங்குதல் கூட சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.  தேவையான தூக்கம் உடலுக்கு கிடைக்காததால் உடலில் பல மாற்றங்கள் உண்டாகின்றன.  தூக்கம் இல்லாததால் இன்சுலின் ஹார்மோன் சுரப்பிற்கு தடை ஏற்படுத்துகிறது, மன அழுத்தம், உடல் சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் மற்றும் உடல் எடையை அதிகரிதல் போன்றவற்றை உடலில் ஏற்படுத்துகிறது.  எனவே, உடலுக்கு தேவையான உறக்கத்தை கொடுத்தல் நமது கடமை ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளையின் சுற்றளவு, பரப்பளவு மற்றும் கன அளவு formula | cylinder

வட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவிர்க்கான சூத்திரம் | area and circumference formula of circle

கனசதுரத்தின் மொத்த புறப்பரப்பு, பக்கப் பரப்பு, மூலைவிட்டம் மற்றும் கன அளவுகளின் formula|cube's volume, total surface area and lateral surface area and diagonal formula