நற்றிணை பற்றிய முழு விவரம் | natrinai in sangam literature
நற்றிணை
நல் + திணை = நற்றிணை ஆகும். எட்டுதொகை நூல்களில் ஒன்று நற்றிணை ஆகும். எட்டுதொகை நூல்களில் நல் என்ற அடைமொழி கொண்ட நூல் ஆகும். இன்னூலில் மொத்தம் நானூறு (400 பாடல்கள் ) பாடல்கள் உள்ளன. உள்ள நானூறு பாடல்களும் 175 புலவர்களால் பாடப்பட்டுள்ளது. தொகுப்பித்தவர் பெயர் பன்னாடு தந்த மாறன் வழுதி ஆவார். ஆனால் இன்னூலை தொகுத்தவர் பெயர் இன்னும் தெரியவில்லை. இன்னூலில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் 9 அடிகள் சிறுமையும் - 12 வரை பெருமையும் கொண்டு உள்ளன. இன்னூலில் உள்ள பாடல்கள் அனைத்தும் அகவற்பா அல்லது (ஆசிரியப்பா ) என்னும் பாவகையால் ஆனது. வழங்கப்படும் வேறு பெயர்கள்,
1. நல் நற்றிணை
2. நற்றிணை நானூறு
ஆகும். இன்னூல் அகநூல் வகையை சார்ந்தது. இன்னூலின் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். இன்னூலில் கடவுள் வாழ்த்து பாடலில் கடவுள் திருமால் பற்றி பாடப்பட்டுள்ளது. இன்னூலில் ஓரறிவு உயிரிகளையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல், அறவழியில் பொருளை ஈட்டுதல் போன்ற தமிழரின் மேலான பண்புகளை பற்றி சிறப்பாக கூறுகிறது. இன்னூலுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் பின்னத்தூர் நாராயணசாமி அவர்கள். மேலும் இன்னூலை பதிப்பித்து 1915 ஆண்டு வெளியிட்டார். குருகு, நாரை, கிளி போன்ற பறவைகள் தூதாக அனுப்பப்பட்ட செய்தியை கூறுகிறது. மாந்தை என்ற சேர நாட்டு கடற்கரை நகரம் பற்றி கூறுகிறது. மருகூர்ப்பட்டினம் என்ற பாண்டிய நாட்டு கடற்கரை நகரம் பற்றியும் கூறுகிறது. தை நீராடுதல் பற்றிய செய்திகளும் கூறப்பட்டுள்ளன.
நற்றிணை - சில பாடல்கள் :
முதல் பாடலாக மிளைக்கிழான் நல்வேட்டனார் அவர்களின் பாடல். இவர் ஒரு சங்க கால புலவர் ஆவார். இப்பாடல் நற்றிணையில் இருநூற்றுப்பத்தாவது பாடல் ஆகும்.
"அரிகால் மாறிய அங்கண்-
அகல்வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மினொடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்றுதன் செய்வினைப்-
பயனே
சான்றோர் செல்வம் என்பது -
சேர்ந்தோர்
புண்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வமென்-
பதுவே."
- மிளைக்கிழான் நல்வேட்டனார்.
சங்க கால பெண்பாற் புலவர்களுள் ஒருவர் நக்கண்ணையார் அவர்கள். இவர் நற்றிணையில் நெய்தல் திணை பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
"இறவுப்புறத் தன்ன பிணர்படு -
தடவுமுதற்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத்-
தாழை
பெருங்களிற்று மருப்பின் அன்ன-
வரம்பு முதிர்பு
நன்மா னுழையின் வேறுபடத்-
தோன்றி
விழவுக்களங் கமழும் உரவுநீர்ச்-
சேர்ப்ப!
இனமணி நெடுந்தேர் பாக னியக்கச்
செலீஇய சேறி யாயின் இவளே
வருவை யாகிய சின்னாள்
வாழா ளாதல்நற் கறிந்தனை-
சென்மே."
- நக்கண்ணையார்.
கருத்துகள்
கருத்துரையிடுக