எளிய முறையில் வீட்டில் உள்ள பொருள்கள் கொண்டு முகப்பருவிற்கு தீர்வுகள் |pimples prevention and treatments
முகப்பரு வராமல் தடுக்கும் வழிகள்
தற்போது உள்ள சூழலில் இன்றையை இளைஞயர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆகியோருக்கு தனது அழகின் மீது தனி அக்கறை உண்டு. ஆனால் அவர்கள் அழகை கெடுப்பதில் முகப்பரு முக்கியமான ஒன்று. இது 13 வயது முதல் வர தொடங்குகிறது. முகப்பருவானது பெரும்பாலும் உடலில் ஹார்மோன் பிரச்சனை, காற்று மாசு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் உருவாகிறது. இதை கட்டுப்படுத்துவது இன்றைய அழகு பிரியர்களுக்கு பெரும் சவாலாக அமைகிறது. முகப்பருவை வராமல் கட்டுப்படுத்தும் பத்து வழிமுறைகள் பற்றி காண்போம்.
1. முகத்தை நன்கு கழுவுதல் :
முகப்பருவை தடுக்கும் முறைகளில் மிக முக்கியமான முறை முகத்தை கழுவுதல் ஆகும். தினமும் இருமுறை ஆவது முகத்தை கழுவுதல் வேண்டும். இப்படி கழுவும்போது முகத்தில் இருக்கும் மாசு பொருள்கள், எண்ணெய் பொருள்கள் மற்றும் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறுகிறது. ஒரு நாளைக்கு இருமுறை முகத்தை கழுவுதல் போதுமானது. முகத்தை கழுவும் போது வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். சூடான நீரை பயன்படுத்த கூடாது. மென்மையான சோப்பை பயன்படுக வேண்டும். கடினமான சோப்பை பயன்படுத்த கூடாது. முகத்தை கழுவும்போது பிரேஷ் போன்ற பொருளை கொண்டு முகத்தை தேய்க்க கூடாது. கைகளால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். முகத்தை நன்கு சலவை செய்து காய்ந்த மிருதுவான துண்டை கொண்டு துடைக்க வேண்டும். அழுக்கான துண்டை கொண்டு துடைத்தால் அதில் உள்ள பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண் கிருமிகள் முகத்தில் பட வாய்ப்பு இருக்கிறது.
2. ஈரப்பதம்
முகத்தில் முகப்பரு வராமல் காப்பதில் முகத்தின் ஈரப்பதம் முக்கியமானது. முகம் வறண்ட நிலையில் இருக்கும் போது முகப்பரு வருகிறது. மேலும் நல்ல ஈரபதம் தரும் உறித்தல் சுத்தப்படுத்தியை ( peeling cleaner) பயன்படுத்துங்கள்.
3. முகப்பருவிற்கு எதிரான மருந்து பொருளை பயன்படுத்துதல் :
முகப்பரு கட்டுப்பாட்டில் மருந்து பொருளின் அவசியம் வேண்டும். அந்த மருந்து பொருள்களில் உள்ள பென்ஸோன் பெராக்சைட், சாலிசிலிக் அமிலம், கிளைகாலிக் அமிலம் போன்றவை உள்ளதால் அவை சருமத்தில் உள்ள பாக்டீரியா அழிக்கப்பட்டு சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துள்ளது. தேவையான அளவு மருந்தை சிறிது கால இடைவெளியில் பயன்படுத்த வேண்டும். மருந்து பொருளை பயன்படுத்தவில்லை எனில் அதற்கு மாற்றாக ரெடினோய்ட் ஜெல் பொருளை பயன்படுத்தலாம். இது பரு உருவாக ஆரம்பிக்கும் போதே வேலை செய்ய ஆரம்பித்து முகப்பரு வராமல் தடுக்கிறது. இந்த மருந்து பொருள்களை பயன்படுத்தும் போது மிகுந்த கவனத்துடன் கையாளவேண்டும்.
4. "மேக் அப் " போடுவதை முடிந்த வரை குறைத்து கொள்ளுதல் :
நாம் தினமும் நம்மை அழகு படுத்திக்கொள்ள விரும்புகிறோம். அதற்காக பல அழகு படுத்தும் பொருள்களை பயன்படுத்துகிறோம். இதை தினம் தினம் பயன்படுத்தி வருவதால் நம் முகத்தில் ஒரு படலம் போல ஒரு லேயர் உருவாகிறது. இதனால் உங்கள் முகம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே நீங்கள் மேக் அப் செய்வதை முடிந்தவரை குறைத்துவிட்டு முகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அழகு பொருள்களை பயன்படுத்த கூடாது. இரவில் தூங்க செல்லும் முன்னர் நன்றாக முகத்தை சுத்தமான தண்ணீரை கொண்டு கழுவ வேண்டும். கழுவிய பின் ஒரு நல்ல சுத்தமான துணியை கொண்டு முகத்தை துடைக்க வேண்டும்.
மேலும் உங்கள் முகம் சூடாவதையும் சூடான பொருளுக்கு அருகில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். அதாவது தலைக்கு குளித்துவிட்டு முடியை உலர்த்த ஹேர் ட்ரயர் பொருளை பயன்படுத்துகிறோம். அந்த பொருளில் இருந்து வரும் சூடான காற்று கூட பாதிப்பை ஏற்படுத்தும். அதை தவிர்க்க முடியவில்லை என்றாலும் கூட அதை குறைவான நேரம் பயன்படுத்துவதும் அந்த காற்று முடிந்த வரை முகத்தில் படாமல் இடையில் ஒரு துணியோ அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளை கொண்டு மறைத்துக் கொள்வது நல்லது.
மேலும் ஒரு முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அது உங்கள் முகத்தில் எண்ணெய் பொருள் உருவாகும் போதெல்லாம் அதை ஒரு நல்ல துணியை கொண்டு அவ்வப்போது துடைத்து கொள்ள வேண்டும்.
5. கையை கொண்டு அடிக்கடி முகத்தை தொடுவதை தவிர்க்க வேண்டும்:
இது ஒரு முக்கியமான முறை. நாம் தினமுல் பல இடங்களுக்கு செல்கிறோம். அவ்வாறு வெளியே சென்று வரும் போது பல இடங்களில் கைகளை தொடுகிறோம். இதனால் பல கிருமிகளை நம் கையில் கொண்டு வருகிறோம். அதே கையால் முகத்தை தொடும் போது நமது கையில் உள்ள கிருமி முகத்தை அடைகிறது. இது முகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி முகத்தில் பரு வர வைக்கிறது. எனவே முகத்தை தொடுவதை நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தினமும் கைகளை நல்ல சுத்தமான தண்ணீரால் கழுவி அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ள வேண்டும். உங்கள் கைகள் சுத்தமாக உள்ளதை உறுதி செய்து கொண்டு பிறகு முகத்தை தொடலாம்.
6. சூரிய ஒளியில் அதிக நேரம் நிற்க கூடாது :
சூரிய ஒளி அதிக நேரம் முகத்தில் படாதவாரு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏன் என்றால் அது உங்கள் முகத்தில் இருந்து அதிக நீரை உறுஞ்சும். இதனால் உங்கள் முகத்தில் எண்ணெய் அளவு கூடிவிடும். இது முகப்பரு வர செய்யும்.
அவ்வாறு வெயிலில் அதிக நேரம் இருந்தால் சன் கிரீமை பயன் படுத்த வேண்டும். அதை பயன்படுத்தும் போதும் நல்ல தரமான முகப்பருவில் இருந்து பாதுகாப்பு தரக்கூடிய சன் கிரீமை பயன்படுத்த வேண்டும்.
7. முகப்பருவை கிள்ளக் கூடாது :
முகப்பரு வந்தால் அதை கில்லுவது ஒரு மோசமான பழக்கம் ஆகும். அதனால் உங்கள் அழகு மிகவும் சீரகுழைந்து விடும். நீங்கள் கில்லிய பருவானது சிறிது நேரம் கழித்து புண்ணாகி விடும். அந்த புண்ணியில் கிருமிகள் தொற்றும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அந்த புண்ணானது சரியானாலும் அந்த இடம் கருப்பு நிறத்தில் தனியாக தோற்றமளிக்கும். எனவே பருவை கில்லி உங்கள் அழகை நீங்களே சீர்க்குழைத்து கொள்ள வேண்டாம்.
8. டீ பிரீ ஆயில் பயன்படுத்துதல் :
டீ பிரீ ஆயில் என்பது முகப்பருவிற்கு நல்ல பலனை தரும் ஒரு சிறந்த பொருள் ஆகும். டீ பிரீ ஆயில் என்பது ஒரு வகை மரத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு பிரேத்தியக்க எண்ணெய் பொருள் ஆகும். இந்த எண்ணெய்யை முகத்தில் பூசுவதால் உங்கள் முகத்தின் மேல் உள்ள பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற தீங்கு தரும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுகின்றன. மேலும் இந்த எண்ணெயை பரு உள்ள இடத்தில் சுற்றி பூசுவது நல்ல பலனை தரும். அதற்காக இதனை ஒரே முறையில் அதிகமாக பயன்படுத்த கூடாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டு அல்லது துளிகள் மட்டும் வேண்டும். அதிகம் பயன்படுத்துவது உங்கள் முகத்தின் தோலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
9. நுண்ணுயிரிக்கு எதிரான மருந்து பொருள்களை பயன்படுத்துதல் :
நுண்ணுயிரிக்கு எதிராக மருந்து பொருள்களை பயன்படுத்துவது ஒரு சிறந்த முறை ஆகும். இந்த முறையில் நீங்கள் உங்கள் தோல் மருத்துவரை பார்த்து அவருடைய வழிகாட்டுதல் படி நடந்து கொள்ளுதல் வேண்டும். அவர் என்ன மருந்து எழுதி கொடுக்கிறாரோ அந்த மருந்தை மட்டுமே வாங்கி பயன்படுத்துதல் வேண்டும். மருந்ததுவரை அனுகாமல் நீங்கள் கடைகளில் மருந்துகளை நீங்களாக வாங்கி பயன்படுத்துதல் கூடாது. அது உங்களுக்கு பாதிப்பை ஏற்பாடுத்த கூடும். இந்த மருந்துகளை உபயோகிப்பதன் மூலம் முகத்தில் உள்ள பாக்டீரியா மற்றும் தீங்கு தரும் நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகிறது.
உங்கள் தோல் மருத்துவர் கொடுத்த மருந்தை நீங்கள் பயன்படுத்த தொடங்கிய நாள் சில நாள்கள் கழித்து மருந்து உங்கள் உடலில் என்ன விளைவை ஏற்படுத்தி உள்ளது என கவனிக்க வேண்டும். மருந்து உங்கள் உடலுக்கு எதிராக செயல்பட்டது எனில் குறைவாகவோ உபயோகிக்க வேண்டும் அல்லது உங்கள் தோல் மருத்துவரிடம் கூற வேண்டும்.
10. " பிரெஞ்சு க்ரீன் கிளய் " யை முகத்தில் அப்ளை செய்தல் :
இது ஒரு ஊட்ட சத்துக்கள் நிறைந்த பொருள் ஆகும். 2010 ரிசர்ச் -யின் படி இந்த பிரெஞ்சு க்ரீன் கிளய் -யில் பாக்டீரியாவை எதிக்கும் பொருள் அதிகம் உள்ளது நிரூப்பிக்கபட்டுள்ளது. மேலும் இது முகத்தில் உள்ள மாசு பொருள்களை வெளியேற்றுகிறது. முகத்தில் உள்ள வீக்கம், அதிகப்படியான எண்ணெய் போன்றவற்றை நீக்குகிறது. முகப்பருவிற்கு எதிராக நன்கு செயல்படுகிறது.
இது பவுடர் வடிவிலும் கிடைக்கிறது. இந்த பவுடரை தண்ணீரில் கலக்கி மேலும் உங்களுக்கு வேண்டுமெனில் தேன் போன்ற இயற்கை பொருள்களை அதில் சேர்த்து பயன்படுத்தலாம். இதை தயார் செய்து கொண்டு முகத்தில் ஒரு மாஸ்க் போல் பூசிக்கொள்ள வேண்டும். மேலும்
11. சில உணவு பழக்கங்களை தவிர்த்தல் :
இன்று நம்மிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கங்களில் ஒன்று சாப்பிடாமல் டையட்டில் இருப்பதால் குண்டாவதை தவிர்க்க முயற்சி செய்கிறோம். இப்படி டையட்டில் இருப்பதும் கூட முகத்தில் முகப்பரு உருவாக காரணமாக அமைகிறது. ஆல்கஹால் மற்றும் வெள்ளை சர்க்கரை போன்ற உணவு பொருளை சேர்த்துக்கொள்வதாலும் முகப்பருவை இந்த உணவு பொருட்கள் தூண்டுக்கின்றன. இந்த உணவு பொருட்களை தவிர்ப்பதால் நல்ல பலனை பெறமுடியும்.
இவ்வாறு நீங்கள் டயட் எடுக்க விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் உங்கள் மருத்துவரை பார்த்து உங்கள் உடம்பிற்கு எவ்வளவு கலோரி உணவு தேவை என்பதை தெரிந்து கொண்டு அவரின் அறிவுரையின் படியே டயட் எடுக்க வேண்டும்.
12. டென்ஷன் ஆவதை தவிர்த்தல் :
பெரும்பாலும் டென்ஷன் ஆவதால் முகப்பரு அதிகம் உருவாவது இல்லை. ஆனால் "அமெரிக்கன் அகாடமி ஆப் டெரமோட்டாலஜி " நடத்திய ஆய்வில் நாம் டென்ஷன் ஆவதால் அதிகப்படியான ஹார்மோன்கள் உடலில் உருவாகிறது. இதனால் அதிகபடியான எண்ணெய் பொருள் வெளியேறுகிறது.
சில வழிமுறைகள் மூலம் உங்கள் டென்ஷனை குறைக்கலாம். அவை,
*யோகா செய்வது
*உடற்பயிற்சி செய்வது
*மெடிடேஷன் செய்வது
*அரோமா தெரபி செய்வது
* புத்தகம் படிப்பது
*விளையாடிவது
- போன்ற வழிகள் மூலம் முடிந்த வரை டென்ஷனை குறைக்க முயற்சி செய்யுங்கள்.
முகப்பரு எப்படி உருவாகிறது :
நமது தோலானது மில்லியன் கணக்கிலான சிறு சிறு துளைகளால் ஆனது. நமது தோலின் மேற்பரப்பில் சீபம் என்ற சுரப்பியும் உள்ளன. இந்த சுரப்பி சீபம் என்ற பொருளை சுரக்கிறது. இந்த சீபம் பொருளுடன் இறந்த தோல் செல்களும் வெளியேறுகின்றன. இந்த சீபம் பொருள் அதிகம் சுரைப்பதாலும் எண்ணெய் பொருள் அதிகம் வெளியேறுவதாலும் தோலில் உள்ள சிறு துளைகளை அடைத்து கொள்கின்றன. மேலும் இறந்த தோல் செல்களும் சேர்ந்து அடைத்து கொள்கின்றன. பின்னர் இதில் பாக்டீரியா உருவாகி அது அதிகமாக பெறுக்கம் அடைகின்றன. இந்த பாக்டீரியாக்கள் அந்த மூடிய துளைகளை சுற்றியும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பின்னர் இதன் மேல் சீழ் உருவாகி பின்னர் பருவாக மாறுகிறது.
பரு உருவாகிய பிறகு என்ன செய்ய வேண்டும் :
பரு உருவாகிய பிறகு முதலில் நீங்கள் செய்ய கூடாத ஒரு செயல் அதை கில்லக் கூடாது. இவ்வாறு கில்லுவதால் பாக்டீரியா வெளியேறி மற்ற இடங்களுக்கும் அது பரவுகிறது.
பாதிப்பு ஏற்பட்டவுடன் முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது சுத்தமான தண்ணீரை கொண்டு சோப்பு போட்டு கழுவ வேண்டும். கழுவிம்போது பிரஷ் போன்றவற்றை கொண்டு கழுவாமல் மென்மையாக உங்கள் விரல்களால் கழுவ வேண்டும். பின்னர் பாதிக்கப்பட்ட இடத்தை சுற்றி பென்சோல் பேரோக்ஸைடு அல்லது சாலிசிளிக் ஆசிட் பூச வேண்டும். பரு வெடிக்கும் நிலை வரும்போது நீங்களாக எந்த முயற்சியும் செய்யாமல் உங்கள் தோல் மருத்துவரை பார்த்து சரியான சிகிச்சையை பெறவேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக