எளிய வழிகளில் எடையை குறைக்கும் சில வழிகள் | Easy ways to weight loss in tamil
உடல் எடையை
குறைக்கும்
வழிகள்
தற்போதையை சூழலில் நம் பெரும்பாலான மக்களிடையே காணப்படுவது உடல் எடை அதிகரித்து குண்டானவர்களாக காணப்படுகின்றனர். இதற்கான முக்கிய காரணம் அதிக கலோரி உணவு எடுத்து கொள்வது, குறைவான உடல் உழைப்பு, போதைய உடல் பயிற்சி இல்லாமை, சரியான உணவு பழக்கம் இன்மை, துரித உணவை (fast food, chips and oil items)அதிகமாக விரும்புவது ஆகியவை ஆகும். இதனால் உடலில் அதிக கொழுப்பு சேகரிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்கிறது. இதனால் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் அதிகரிப்பு, இதய நோய், இரத்த குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகள் உடலில் உண்டாகின்றன. " சரியான வயதிற்குரிய எடையை விட 10% அதிகமாக இருப்பது உடல் பருமன் என கூறப்படுகிறது".
உடல் பருமனை கண்டுபிடிக்க ஒரு வழிமுறை உண்டு. உடல் பருமனை உடல் எடை குறியீடு என கூறப்படும் BMI (Body Mass Index) என்ற அளவீட்டை கொண்டு அளவிடலாம். உங்களின் உடல் எடையை கிலோகிராம் அளவில் கொண்டு உங்கள் உடல் உயரத்தின் மீட்டர் அளவின் மடங்கினால் வகுத்தால் BMI அதாவது நீங்கள் குண்டானவர்களா இல்லையா என கண்டுபிடிக்கலாம். கிடைக்கும் BMI அளவு 19 முதல் 25 குள்ளாக இருந்தால் நீங்கள் குண்டானவர்கள் இல்லை. 25 அளவை விட கூடும்போது நீங்கள் குண்டானவர்களாக கருத்தப்படுவீர்கள். உதாரணமாக ஒருவரின் உடல் எடை 70 கிலோகிராம் மற்றும் அவரின் உயரம் 180 சென்டிமீட்டர் (1.8 மீட்டர் ) எனில் அவரின் BMI 21.6 ஆகும்.
=70kg/1.8×1.8(உயரம் )
=70/3.24
BMI=21.6 ஆகும்.
இவ்வாறு உங்கள் எடை அதிகமாக இருப்பின் அதை குறைக்கும் வழிகள் பின்வருமாறு,
1. உணவுக்கு முன் நன்கு தண்ணீர் குடித்தல் :
உணவிற்கு முன் நன்கு தண்ணீர் குடிக்கும் முறை ஆனது உடல் எடை குறைக்கும் முறைகளில் மிகவும் முக்கியமான வழி ஆகும். இவ்வாறு உணவிற்கு முன் தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் மேட்டபொலிசம் (metabolism) ஆனது அடுத்த 1-1.30 மணி நேரங்களில் 24-30% அதிகரிக்கிறது. இதனால் உங்கள் கலோரிகள் அதிகபடியாக எரிக்கப்படுகிறது.
நீங்கள் உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அரை லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் 44% உடல் எடையை குறைக்க உதவுகிறது.
2. முட்டை உட்கொள்ளுதல் :
காலை உணவாக முட்டையை எடுத்து கொள்வது உடல் எடையை குறைக்க மிகவும் உதவுகிறது. காலையில் அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவை குறைவாக எடுத்து கொள்ளுதல் வேண்டும். நீங்கள் முட்டை பிடிக்காதவர்கள் எனில் முட்டைக்கு மாற்றாக வேறு புரத சத்துக்கள் உள்ள உணவை எடுத்து கொள்வது நல்லது.
3.காபி குடித்தல் :
ஒரு நல்ல காபியில் அதிகபடியான ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. காபி நமது உடலில் மேட்டபொலிசத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால் உங்கள் உடலில் 10முதல் 29% வரையிலான கொழுப்பு எரிக்கப்படுகிறது. இப்படி காபி குடிக்கும் பொது சர்க்கரையை முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும். மாறாக சர்க்கரை பயன்படுத்துகையில் அது உங்கள் கலோரியை அதிகரிக்க செய்கிறது.
4. க்ரீன் டீ குடித்தல் :
காபியை போலவே க்ரீன் டீயும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலனை கொடுக்கிறது. க்ரீன் டீயில் சிறிதளவு கெபைன் உள்ளது. இதில் நல்ல பலனை கொடுக்கும் ஆன்டிஆக்சிடென்ட் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. மேலும் க்ரீன் டீ ஆனது உடல் எடையை குறைக்கிறது என நிரூப்பிக்கப்பட்டுள்ளது.
5. இடைப்பட்ட உண்ணாவிரதம் :
உண்ணாவிரதம் ஆனது உடல் எடையை குறைத்தலில் நல்ல பலனை அளிக்கிறது. இம்முறை பெரும்பாலான மக்கள் அறிந்த முறைகளில் ஒன்று. இம்முறையில் மேலும் கலோரிகள் உடலில் சேர்வது இல்லை.
6. உணவில் சர்க்கரையை தவிர்த்தல் :
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சர்க்கரையை தவிர்த்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இதை அறியாமல் பலர் சர்க்கரையை பயன்படுத்துக்கின்றனர். அதிகபடியான சர்க்கரை பயன்படுத்துவதால் சர்க்கரை நோய் உருவாகவும் வழிவகுக்கிறது. மேலும் இதயம் சம்பந்தமான பிரச்சனையும் உருவாகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் உணவில் சர்க்கரையை பயன்படுத்துவத்தை தவிர்த்தல் நல்லது.
7. தினமும் உடற்பயிற்சி :
உடல் எடையை குறைக்க மிக முக்கியமான ஒன்று தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் உடலில் 500 முதல் 800 அளவிலான கலோரிகள் எரிக்கப்படுகிறது. மேலும் அருகில் உள்ள கைடைகளுக்கு மிதிவண்டியில் செல்வது மற்றும் அலுவலகம் அருகில் உள்ளது எனில் மிதிவண்டியில் செல்வதன் மூலமும் உடல் எடையை மிக விரைவாக குறைக்கலாம்.
8. நார் சத்துக்கள் உள்ள உணவை உண்ணுதல் :
இம்முயற்சியில் நார் சத்து உள்ள உணவை உண்ணுதல் என்பது முக்கியமான ஒன்று. இது உங்கள் எடை மேலும் உயராமல் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
9. உணவில் காய்கறியை அதிகம் எடுத்து கொள்வது :
உடல் எடை குறைப்பு முயற்சியில் காய்கறிகளில் பங்கு அவசியமான ஒன்று. காய்கறிகளில் குறைந்த அளவே கலோரிகள் உள்ளன. ஆனால் அதிகபடியான நார் சத்துக்கள் உள்ளன. ஆய்வில் யார் அதிகபடியான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்கின்றனரோ அவர்கள் உடல் எடை குறைத்தலில் நல்ல பலனை அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் அதிகபடியான தாதுக்கள் உள்ளன.
10.உணவிற்கு அடிமை ஆவதை தவிர்த்தல் :
உடல் எடை குறைப்பதில் நாவடக்கம் முக்கியம். நாவை அடக்கி வைத்தாலே உடல் பருமன் பிரச்சனை வராது. உடல் எடை குறைக்கும் முயற்சியில் நீங்கள் இறங்கிவிட்ட பிறகு அதிக கலோரிகள் மற்றும் எண்ணெய் பண்டங்கள் மற்றும் துரித உணவுகளை முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக