நான்கு நல்ஒழுக்கங்கள் கூறும் நான்மணிக்கடிகை | Naanmanikadikai in pathinenkeel kanakku
நான்மணிக்கடி கை நான்மணிக்கடிகை பதினெண்கீழ்கணக்கு நூலகளுள் ஒன்று. இன்னூலை எழுதியவர் விளம்பி நாகனார் ஆவார். இவரின் இயற்பெயர் நாகனார். விளம்பி என்பது இவர் பிறந்த ஊர் ஆகும். இன்னூல் கி. பி 4 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இன்னூல் அறக்கருத்துக்களை கூறும் நூல் ஆகும். இன்னூல் "வெண்பா " பாவகையால் ஆன நூல். நான்மணிக்கடிகையில் மொத்தம் 106 பாடல்கள் உள்ளன. இதில் முதல் இரண்டு பாடல்கள் கடவுள் வாழ்த்து ஆகும். நான்மணிக்கடிகை என்ற நூலில் பெயரில் கடிகை என்ற சொல்லுக்கு துண்டு கட்டுவடம் ஆபரணம் நாழிகை கரகம் தோள்வளை என்று பல பொருள்கள் உண்டு. இன்னூலின் ஒவ்வொரு பாடலும் நான்கு போன்று மக்கள் நல்ஒழுக்கத்துடன் வாழ நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றது. இன்னூலின் இரண்டு பாடல்களை மட்டும் ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இன்னூல் " அம்மை " என்னும் வனப்பு வகையை சேர்ந்தது. வனப்பு என்பதன் பொருள் அழகு ஆகும். ...