திருக்குறள் பற்றிய முழு விவரம் | thirukkura in pathinenkeel kanakku l

    திருக்குறள்

      திருக்குறள் பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.  திரு +குறள் கிடைப்பது திருக்குறள்.  குறள் என்பது இரண்டடி வெண்பாவை குறிக்கும் மற்றும் திரு என்பது சிறப்பு அடைமொழி ஆகும்.  திருக்குறள் நூலானது மனிதன் வாழ்வதுக்குரிய அறக்கருத்துக்களை கூறும் அறநூல்.   மனித வாழ்வை நெறிப்படுத்தும் தெய்வ நூல்.  இன்னூல் குறள் வெண்பாவால் ஆனதால் இப்பெயர் பெற்றது.  குறள் என்பது குறைட்பாவை உணர்த்தாமல் அப்பாவால் ஆன நூலை குறிப்பதால் ஆகுபெயர் ஆகும்.  திருக்குறள் ஆனது "அடையடுத்த கவியராகு பெயர் " ஆகும். 
   
           பதினெண்நூல்களில் அதிக பாடல்களையும் அடிகளையும் கொண்ட நூல் திருக்குறள்.   பதினெண்கீழ்கணக்கு நூலகளுள் குறள் வெண்பாவால் (1 3/4 அடி ) ஆன நூல் திருக்குறள் ஆகும்.  "தமிழ் மாதின் இனிய உயர்மொழி "என உலகோரால் பாராட்டப்படும் நூல் திருக்குறள் ஆகும்.  தமிழ்மறை எனவும் உலக பொதுமறை எனவும் அழைக்கப்படும்.  

திருக்குறள் நூலின் வேறு பெயர்கள் :

  • முப்பால்
  • பொய்யா மொழி
  • வாயுறை வாழ்த்து
  • உத்திர வேதம்
  • தெய்வ நூல்
  • இயற்கை வாழ்வில்லம்
  • தமிழ் மறை
  • பொதுமறை
  • முதல் நூல்
  • திருவள்ளுவம்
  • திருவள்ளுவபயன்
  • பொருளுரை
  • முதுமொழி
உலக பொதுமறை என பல பெயர்களால் திருக்குறள் அழைக்கப்படுகிறது.

திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள் :

        திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவர் காலம் கி. மு 31 என்பர்.  இதனை கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டு தை திங்கள் இரண்டாம் நாள் தமிழக அரசால் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகிறது.  பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என பொதுநெறி கட்டியவர் வள்ளுவர்.

திருவள்ளுவர் ஆண்டு =
     
      கிறித்து ஆண்டு (கி. பி )+31

 திருவள்ளுவரையும் பல பெயர்கள் கொண்டு அழைப்பர்.  அவை,

  • தேவர்
  • முதல் பாவலர்
  • தெய்வ புலவர்
  • மாதனுபங்கி
  • செந்நாப் போதார்
  • பெருநாவலர்
  • பொய்யில் புலவர்
  • வள்ளுவ நாயனார்
நான்முகனார் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

திருக்குறள் நூல் அமைப்பு :

   திருக்குறள் மூன்று பெரும் பிரிவை உடையது. அவை
    
       1. அறத்துப்பால்
       2. பொருட்பால்
       3. இன்பத்துபால்

திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்களும், 1330 குறள்களும், 9 இயல்களும் கொண்டுள்ளது.

அறத்துபால்:
          38 அதிகாரங்கள் கொண்டுள்ளது. 380 குறட்ப்பாக்களை கொண்டுள்ளது.  4 இயல்கள் உள்ளது.
அவை, பாயிரவியல்,இல்லறவியல் துறவரவியல், ஊழியல்.

பாயிரவியல்     - 4 அதிகாரங்கள்
இல்லறவியல்  - 20 அதிகாரங்கள்
துறவரவியல்    - 13 அதிகாரங்கள்
ஊழியல்              -  1 அதிகாரம்

பொருட்பால் :
       பொருட்பாலில் மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.  700 குறட்ப்பாக்கள் உள்ளன.மேலும் 3 இயல்கள் உள்ளன. அவை அரசியல், அங்கவியல், குடியியல்

அரசியல்       - 25 அதிகாரங்கள்
அங்கவியல் - 32 அதிகாரங்கள்
குடியியல்      - 13 அதிகாரங்கள்

இன்பத்துப்பால் :
         இன்பத்துபாலில் மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன.  250 குறள்கள் உள்ளன. 2 இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை களவியல் மற்றும் கற்பியல்.

களவியல்    - 7 அதிகாரங்கள்
கற்பியல்      -18 அதிகாரங்கள் 


திருக்குறளின் சிறப்புகள் :

         மனித வாழ்வின் மென்மைகளையும், வாழ்வியல் நெறிகளையும் மனித நாகரீகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னர் கூறிய நூல் திருக்குறள்.  "அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது ".   திருக்குறளின் சிறப்பை பற்றி கூறும் நூல் திருவள்ளுவமாலை.  திருவள்ளுவமாலையில் மொத்தம் 55 பாடல்கள் உள்ளன.  திருவள்ளுவமாலை 55 புலவர்களால் பாடப்பட்டது.  சிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை  வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா, குமரேச வெண்பா போன்றவையும் திருக்குறளின் சிறப்பை கூறுகின்றன.  1812 ஆண்டு முதன்முதலில் மலையத்துவாசன் மகன் ஞானப்பிரகாசம் அவர்களால் பதிப்பித்து தஞ்சையில் வெளியிடபட்டது.  பரிமேலழகர் உரையுடன் முதன்முதலில் திருக்குறளை பதிப்பித்தவர் ராமானுஜ கவிராயர் ஆவார். இவர் 1840 ஆம் ஆண்டு வெளியிடடார். 

       இங்கிலாந்து இளவரசி விக்டோரியா மகாராணி அவர்கள் காலையில் எழுந்ததும் முதலில் படிக்கும் நூல் திருக்குறள்.  திருக்குறளில் மென்மையை உணர்ந்த வீரமாமுனிவர் திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிப்பெயர்த்தார்.  ஜி யு போப் 40 ஆண்டுகள் திருக்குறளை படித்து சுவைத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886 ஆண்டு வெளியிட்டார்.  திருக்குறள் உருசிய நாட்டில் அணு துளைக்காத சுரங்க பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் நூல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  இங்கிலாந்து நாட்டு காட்சிசாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது. திருக்குறள் சுமார் 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

     "ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி " என்பது பழமொழி.

    "பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில் " என்பது பழமொழி.

                 - இந்த இரண்டு பழமொழிகளிலும் நாலடியாரும் திருக்குறளும் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது.  'நால்' என்பது நாலடியாரையும் 'இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும்.

   " திருக்குறள் ஒரு வகுப்பாருக்கோ ஒரு மதத்தாருக்கோ, ஒரு நிறத்தாருக்கோ, ஒரு மொழியாருக்கோ, ஒரு நாட்டாருக்கோ உரியது அன்று அது மன்பதைக்கு"

                                 -என திரு. வி. கல்யாணசுந்தரனார் திருக்குறள் அனைவருக்கும் உரிய நூல் என கூறுகிறார்.

   " திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தாருக்கு தெரிந்திருக்காது "
          
                      - என கி. ஆ. பெ. விசுவநாதன் கூறுகிறார்.

  "வள்ளுவரும் தம்குறள் பாவடியால்                                                      -வையத்தார்
     உள்ளுவதெல்லாம் அளர்ந்தார்                                                                     -ஓர்ந்து"
         என பரணர் திருக்குறளையும் திருவள்ளுவரையும் புகழ்ந்து கூறுகிறார்.

" இணையில்லை முப்பாலுக்கு இன்னிலத்தே " என்று பாரதிதாசன் திருக்குறளை புகழ்த்து கூறுகிறார்.

 " அணுவை துளைத்தேழ் கடலைப்
                                                     - புகட்டிக்
    குறுகத் தறித்த குறள் "
                         என ஔவையார் திருக்குறளை புகழ்ந்து கூறுகிறார்.


" வள்ளுவன் தன்னை உலகினுக்கே
                                                           - தந்து
தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு "

          - என பாரதியார் திருவள்ளுவரை புகழ்ந்து பாராட்டுகிறார்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளையின் சுற்றளவு, பரப்பளவு மற்றும் கன அளவு formula | cylinder

வட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவிர்க்கான சூத்திரம் | area and circumference formula of circle

கனசதுரத்தின் மொத்த புறப்பரப்பு, பக்கப் பரப்பு, மூலைவிட்டம் மற்றும் கன அளவுகளின் formula|cube's volume, total surface area and lateral surface area and diagonal formula