இருசமபக்க முக்கோணத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு formula|Isosceles triangle
இருசமபக்க
முக்கோணம்
இருசமபக்க முக்கோணத்தில் ஏதேனும் இரண்டு பக்க அளவு சமமாக இருக்கும்.
இருசமபக்க முக்கோணத்தின் பரப்பளவு :
இருசமபக்க முக்கோணத்தின் அடிப்பக்கம் மற்றும் குதுயரம் ஆகியவற்றின் பெருக்கல் பலனில் பாதியளவு (1/2) ஆகும்.
முக்கோணத்தின் பரப்பளவு சூத்தியம் மூலம் இருசமபக்க முக்கோணத்தின் பரப்பளவு சூத்திரத்தை காண்போம்.
முக்கோணத்தின்பரப்பளவு =1/2bh
இங்கு b என்பது அடிப்பரப்பு, h என்பது குத்துயரம்.
குத்துயரம் = h, b மதிப்பு =?
பிதாகரஸ் தேற்றத்தின் மூலம் b யின் மதிப்பை காண்போம்.
a^2=h^2+(b/2)^2
(b/2)^2=a^2-h^2
b^2/4=a^2-h^2
b^2=2√a^2-h^2
b=2√a^2-h^2
b, h யின் மதிப்புகளை முக்கோணத்தின் பரப்பளவு சூத்திரத்தில் இடவே
=1/2bh
=1/2×2√a^2-h^2×h
இருசமபக்க முக்கோணத்தின்
பரப்பளவு =h√a^2-h^2 ச. அலகுகள்
a என்பது சம அளவுள்ள இரண்டு பக்கங்களின் அளவு, h என்பது குத்துயரம்
மற்றும்
^-என்ற குறியீடு அடுக்கை குறிக்கும்.
இருசமபக்க முக்கோணத்தின் சுற்றளவு :
இருசமபக்க முக்கோணத்தின் சுற்றளவு என்பது இரண்டு சம அளவுடைய பக்கங்கள்(2a) மற்றும் அடிப்பக்கம்(b) ஆகியவற்றின் கூடுதல் ஆகும்.
b யின் மதிப்பு =2√a^2-h^2
இருசமபக்க முக்கோணத்தின்
சுற்றளவு =2a+2√a^2-h^2
சுற்றளவு =2(a+√a^2-h^2) அலகுகள்.
கருத்துகள்
கருத்துரையிடுக