நாற்கரத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு formula| Quadrilateral

      நாற்கரம்


 


       நாற்கரம் என்பது சம அளவுகளற்ற  நான்கு பக்கங்களை கொண்ட பலகோண அமைப்பு ஆகும்.

நாற்கரத்தின்  சுற்றளவு :

               நாற்கரத்தின்  நான்கு பக்கங்களின் அளவுகளின் கூடுதல் அதன் சுற்றளவு ஆகும்.

நாற்கரத்தின்
       சுற்றளவு =AB+BC+CD+AD அலகுகள்.

நாற்கரத்தின்  பரப்பளவு :

     நாற்கரத்தை  BD என்ற மூளைவிட்டத்தின் வழியே பிரிக்கும்போது முக்கோணம் ABD மற்றும் முக்கோணம் BCD கிடைக்கிறது. இந்த இரண்டு முக்கோணங்களின் பரப்பளவுகளின் கூடுதல் நாற்கரத்தின்  பரப்பளவு ஆகும்.

நாற்கரத்தின்  பரப்பளவு

 = முக்கோணம் ABD +முக்கோணம் BCD

             =1/2×d×h1+1/2×d×h2

             =1/2×d×(h1+h2)

நாற்கரத்தின்
   பரப்பளவு =1/2×d×(h1+h2)ச. அலகுகள்

      d-மூலைவிட்டத்தின் நீளம்

     h1,h2 முறையே முக்கோணம் ABD மற்றும் முக்கோணம் BCD ஆகியவற்றின்  குத்துயரங்கள் ஆகும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளையின் சுற்றளவு, பரப்பளவு மற்றும் கன அளவு formula | cylinder

வட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவிர்க்கான சூத்திரம் | area and circumference formula of circle

கனசதுரத்தின் மொத்த புறப்பரப்பு, பக்கப் பரப்பு, மூலைவிட்டம் மற்றும் கன அளவுகளின் formula|cube's volume, total surface area and lateral surface area and diagonal formula