இணைகரத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு formula | parallelogram
இணைகரம்
இணைகரம் என்பது நான்கு பக்கங்களை கொண்டது மற்றும் இருபரிமாண வடிவில் வரையப்படும் வடிவம் ஆகும்.
இணைகரத்தின் பண்புகள்.
*இணைகரத்தின் எதிரேதிர் பக்கங்கள் சமமானவை.
*இணைகரத்தின் எதிரேதிர் பக்கங்கள் இணையானவை.
*இணைகரத்தின் எதிரேதிர் கோணங்கள் சமமானவை.
*இணைகரத்தின் மூலைவிட்டங்கள் சமமற்றவை.
*இணைகரத்தின் மூலைவிட்டம் இருசம கூறிடும்.
இணைகரத்தின் சுற்றளவு :
இணைகரத்தின் நான்கு பக்கங்களின் அளவுகளின் கூடுதல் அதன் சுற்றளவு ஆகும்.
இணைகரத்தின் சுற்றளவு
=AB+BC+CD+AD அலகுகள்.
இணைகரத்தின் பரப்பளவு :
இணைகரத்தின் அடிப்பக்கம் மற்றும் குத்துயரம் ஆகியவற்றின் பெருக்கல் பலன் அதன் பரப்பளவு ஆகும்.இணைகரத்தின் பரப்பளவு சூத்திரமும் செவ்வகத்தின் பரப்பளவு சூத்திரமும் ஒன்றே. அதற்கான விளக்கம் பின்வருமாறு,
படம் 1யில் உள்ள இணைகரமானது அடிப்பக்கத்தையும் மூலை D யும் இணைக்குமாறு ஒரு குத்துக்கொடு வரையப்படுகிறது. கிடைக்கும் செங்கோண முக்கோணப்பகுதியை 1 எனவும் மீதமுள்ள பகுதியை 2 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. செங்கோணாமுக்கோண பகுதியை மீதமுள்ள பகுதி 2 யின் வலப்புறம் இணைக்கும் போது நமக்கு செவ்வக வடிவம் கிடைக்கிறது. இதனை படம் 2 யில் காண்போம்.எனவே இணைகரத்தின் பரப்பளவு சூத்திரமும் செவ்வகத்தின் பரப்பளவு சூத்திரமும் ஒன்றே ஆகும்.
இணைகரத்தின் பரப்பளவு
= bh ச. அலகுகள்
இங்கு, b- அடிப்பக்கம்
h-குத்துயரம் ஆகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக