சாய்சதுரத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு formula | RHOMBUS
சாய்சதுரம்
சாய்சதுரத்தின் பண்புகள் :
*சாய்சதுரத்தின் அனைத்து பக்கங்களும் சமமான நீளம் உடையது.
*சாய்சதுரத்தின் எதிரேதிர் பக்கங்கள் இணையானவை.
*சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் சம நீளமற்றவை.
*சாய்சதுரத்தின் இரு மூலைவிட்டாங்களும் இணையும் இடத்தில் ஏற்படும் கோணம் 90°.
*மூலைவிட்டங்கள் சாய்சதுரத்தை பிரிக்கும்போது நான்கு சமமான முக்கோணங்கள் உருவாகும்.
*இரு மூலைவிட்டங்களும் சாய்சதுரத்தின் மையத்தில் இணையும்.
சாய்சதுரத்தின் சுற்றளவு :
சாய்சதுரத்தின் நான்கு பக்கங்க அளவுகளும் சமம். இந்த நான்கு பக்க அளவுகளின் கூடுதல் சாய்சதுரத்தின் சுற்றளவு ஆகும்.
சாய்சதுரத்தின் சுற்றளவு
=a+a+a+a
=4a அலகுகள்
இங்கு, a என்பது பக்க அளவு.
சாய்சதுரத்தின் பரப்பளவு :
சாய்சதுரத்தின் இரண்டு மூலைவிட்டங்களின் பெருக்கல் பலனின் பாதியளவு (1/2)அதன் பரப்பளவு ஆகும்.முக்கோணத்தின் பரப்பளவு சூத்திரத்தின் மூலம் சாய்சதுரத்தின் பரப்பளவு சூத்திரத்தை விளக்கமாக காண்போம்.
முக்கோணத்தின் பரப்பளவு
=1/2bh ச. அலகுகள்
முக்கோணம் ABD யை எடுத்து கொள்க.
மேற்கண்ட சாய்சதுரத்தில் b யின் மதிப்பு d2 மற்றும் h யின் மதிப்பு d1/2 ஆகும். முக்கோணத்தின் பரப்பளவு சூத்திரத்தில் bh மதிப்புகளை இடுக,
=1/2×d2×d1/2×2
=1/2×d2×d1
சாய்சதுரத்தின் பரப்பளவு
=1/2×d1×d2ச. அலகுகள்
இங்கு d1, d2 என்பன முறையே சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் ஆகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக