சரிவகத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு formula | Trapezium

       சரிவகம்



 

சரிவகத்தின் பண்புகள் :

      *சரிவகம் இரண்டு இணையான பக்கங்கள் மற்றும் இரண்டு இணையற்ற பக்கங்களை கொண்டுள்ளது.

       *இணையற்று சமமாக பக்கங்கள் இருந்தால் (அதன் நீளங்கள் சமம் எனில் )அதற்கு இருசமபக்க சரிவகம் என்று பெயர்.

சரிவகத்தின் பரப்பளவு :

            சரிவகத்தின் பரப்பளவு சூத்திரம் முக்கோணங்களின் பரப்பளவு  சூத்திரத்திலிருந்து பெறப்படுகிறது. அதன் விரிவான விளக்கம் காண்போம்.

முக்கோணத்தின் பரப்பளவு

                =1/2bh ச. அலகுகள்

இங்கு b என்பது அடிப்பக்கம், h-உயரம்.

    மேலேயுள்ள படத்திலிருந்து,

முக்கோணம் ABD யின்  பரப்பளவு

                 =1/2ah ச. அலகுகள்

முக்கோணம் BCD யின் பரப்பளவு

                  =1/2bh ச. அலகுகள்

முக்கோணம் ABD மற்றும் முக்கோணம் BCD ஆகியவைற்றின் பரப்பளவுகளின் கூடுதல் சரிவகத்தின் பரப்பளவு  ஆகும்.

சரிவகத்தின் பரப்பளவு

=முக்கோணம் ABD +முக்கோணம் BCD
      யின் பரப்பளவு     யின் பரப்பளவு

         =1/2ah+1/2bh

         =1/2h(a+b)

சரிவகத்தின் பரப்பளவு =1/2h(a+b)ச. அ

சரிவத்தின் சுற்றளவு :

     சரிவகத்தின் நான்கு பக்கங்களின் அளவுகளின் கூடுதல் அதன் சுற்றளவு ஆகும்.

சரிவகத்தின் சுற்றளவு
               
                    =AB+BC+CD+AD அலகுகள்.


    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளையின் சுற்றளவு, பரப்பளவு மற்றும் கன அளவு formula | cylinder

வட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவிர்க்கான சூத்திரம் | area and circumference formula of circle

கனசெவ்வகத்தின் புறப்பரப்பு மற்றும் பக்க பரப்பு மற்றும் கன அளவு formula