நான்கு நல்ஒழுக்கங்கள் கூறும் நான்மணிக்கடிகை | Naanmanikadikai in pathinenkeel kanakku
நான்மணிக்கடி கை
நான்மணிக்கடிகை பதினெண்கீழ்கணக்கு நூலகளுள் ஒன்று. இன்னூலை எழுதியவர் விளம்பி நாகனார் ஆவார். இவரின் இயற்பெயர் நாகனார். விளம்பி என்பது இவர் பிறந்த ஊர் ஆகும். இன்னூல் கி. பி 4 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இன்னூல் அறக்கருத்துக்களை கூறும் நூல் ஆகும். இன்னூல் "வெண்பா " பாவகையால் ஆன நூல். நான்மணிக்கடிகையில் மொத்தம் 106 பாடல்கள் உள்ளன. இதில் முதல் இரண்டு பாடல்கள் கடவுள் வாழ்த்து ஆகும்.
நான்மணிக்கடிகை என்ற நூலில் பெயரில் கடிகை என்ற சொல்லுக்கு
- துண்டு
- கட்டுவடம்
- ஆபரணம்
- நாழிகை
- கரகம்
இன்னூலின் இரண்டு பாடல்களை மட்டும் ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இன்னூல் " அம்மை " என்னும் வனப்பு வகையை சேர்ந்தது. வனப்பு என்பதன் பொருள் அழகு ஆகும். இன்னூலின் கடவுள் வாழ்த்து பாடலில் திருமால் தெய்வத்தை முதன்மையாக கொண்டு பாடப்பட்டுள்ளது.
"மனைக்கு விளக்கம் மடவாள் ;
- மடவாள்
தனக்குத் தகைசால் புதல்வர்;
- மனக்கினிய
காதல் புதல்வருக்குக் கல்வியே;
-கல்விக்கு
ஓதின் புகழ்சால் உணர்வு."
விளம்பி நாகனார்.
நான்மணிக்கடிகையில் உள்ள சில அடிகள் :
"யார் அறிவார் நல்லார் பிறக்கும் குடி "
"தனக்கு பாழ் கற்றறிவில்லா உடம்பு "
"யார் மாட்டும் கொள்ளாமை
-வேண்டும் பகை"
"மழையின்றி மாநிலத்தார்க் கில்லை "
"அல்லவை செய்வார்க் கறங்கூற்றம் "
"இளமைப் பருவத்துக் கல்லாமை
- குற்றம்
வளமில்லா போழ்தத்து வள்ளன்மை
-குற்றம் "
"கல்லா ஒருவருக்குத் தம்வாயிற்
- சொற்கூற்றம் "
போன்றவை இன்னூலில் உள்ள சில பொன்னான கருத்துக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக