நாலடியார் அல்லது நாலடி நானூறு | naaladiyaar in pathinenkeel kanakku
நாலடியார்
- சமண முனிவர்கள்
வேளாண் வேதம் என அழைக்கப்படும் மக்களுக்கு வாழ்வியல் அறக்கருத்துக்களை கூறும் நூல் நாலடியார். இன்னூல் பதினெண்கீழ்கணக்கு நூலகளுள் ஒன்று. பதினெண்கீழ்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நாலடியார் ஆகும். திருக்குறளை அடுத்து நல்ல அறக்கருத்துக்களை கூறும் நூல் நாலடியார் ஆகும். இன்னூலை படித்து சுவைத்த ஜி. யு. போப் இன்னூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இன்னூலில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன. நான்கு அடிகளில் ஆறு அறக்கருத்துக்களை கூறுவதால் நாலடியார் என பெயர்பெற்றது. இன்னூலுக்கு நாலடி நானூறு என்ற மற்றொரு பெயரும் உண்டு. இன்னூல் வெண்பா என்னும் பாவகையால் ஆனது. இன்னூல் முப்பெரும் பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
பால் | அதிகாரங்கள் எண்ணிக்கை |
---|---|
1.அறத்துப்பால் | 13 அதிகாரங்கள் |
2. பொருட்பால் | 24 அதிகாரங்கள் |
3. இன்பத்துப்பால் | 3 அதிகாரங்கள் |
இன்னூலில் மொத்தம் 9 இயல்கள் உள்ளன. நாலடியாரை தொகுத்து அதிகாரம் வகுத்தவர் பதுமனார் ஆவார். நாலடியார் நூலை முப்பாலாக பகுத்தவர் தருமர் ஆவார். நாலடியாருக்கு உரை கண்டவர்கள் பதுமனாரும் தருமரும் ஆவர். இன்னூல் வாழ்க்கையில் எளிய முறையை உவமையாக கூறி நீதி கூறும்.
" ஆலும் வேலும் பல்லுக்குறுதி,
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி"
என்ற பழமொழி நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த பழமொழியில் நால் என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கிறது. இந்த பழமொழி மூலம் நாலடியார் நூல் திருக்குறளுக்கு நிகராக கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு நூலும் மனித வாழ்வை நெறிபடுத்தும் இன்றியமையாத நூல் ஆகும்.
"நாய்க்கால் சிறுவிரல்போல் - நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார்
- நட்பென்னாம்
செய்த்தானும் சென்று கொளல் - வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு "
- சமண முனிவர்கள்.
" கல்வி கரையில; கர்பவர் நாள்சில "
மற்றும்
" கல்வி அழகே அழகு "
போன்ற சிறப்பு வாய்ந்த அடிகள் நாலடியாரில் இடம்பெற்றுள்ளன.
கருத்துகள்
கருத்துரையிடுக