புறநானூறு | puranaanooru
புறநானூறு சங்க இலக்கியங்கள் என அழைக்கப்படும் நூல்கள் பாத்துப்பாட்டும், எட்டுதொகையும் ஆகும். சங்க இலக்கியங்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. அந்த எட்டுதொகை நூலில் உள்ள எட்டு நூல்களில் புறம் பற்றி கூறும் முதன்மையான நூல் புறநானூறு ஆகும். புறம் + நான்கு +நூறு = புறநானூறு ஆகும். புறத்திணைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு புறநானூறு நூல் ஆகும். இன்னூலில் மொத்தம் நானூறு பாடல்கள் உள்ளன. இன்னூல் நூற்று ஐம்பதெட்டு (158 புலவர்கள் ) புலவர் மக்களால் பாடப்பட்ட நூல் ஆகும். இன்னூல் அகவற்பா ( ஆசிரியப்பா ) என்னும் பா வகையால் ஆன நூல். இன்னூலை புறம் எனவும் புறப்பாட்டு எனவும் தமிழர் கருவூலம் எனவும் வேறு பெயர்கள் கொண்டும் அழைப்பர். இன்னூலுக்கு கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் "பாரதம் பாடிய பெருந்தேவனார் " ஆவார். இன்னூலை ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். புறநானூறு நூலில் உள்ள பாடல்களின் அடிகள் 4 அடி சி...