பழமொழி நானூறு எழுதியவர் யார் | pazhamozhi naanooru in pathinenkeel kanakku
பழமொழி நானூறு
பழமொழி நானூறு என்ற நூல் மூன்றுறை அரையனார் என்பவரால் எழுதப்பட்டது. இன்னூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அரையன் என்பது இவரின் குடியின் பெயர் ஆகும். மூன்றுறை என்பது இவர் ஊர் பெயர் ஆகும். இவர் சமண சமயத்தை சேர்ந்தவர் ஆவார். இன்னூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி அமைந்து இருக்கும். மேலும் இன்னூலில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் பழமொழி அமைந்துள்ளத்தாலும் நானூறு பாடல்கள் கொண்டு உள்ளதாலும் இன்னூல் " பழமொழி நானூறு என்று பெயர் பெற்றது. இன்னூலில் உள்ள நானூறு பாடல்களும் 34 அதிகாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியர் பழமொழியை முதுசொல் என்று குறிப்பிடுகிறார். இந்த நூலில் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், புலவர்கள், மூவேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர்கள் பற்றிய செய்திகளும் கூறப்பட்டுள்ளது. நீதி கூறும் நூல்களில் திருக்குறள் மற்றும் நாலடியார் நூல்களுக்கு அடுத்து புகழ்பெற்ற நூலாக வைத்து பார்க்கப்படுகிறது. இன்னூலுக்கு வேறு சில பெயர்களும் வைத்து கூறப்படுகின்றன. அவை,
1. மூதுரை
2. முதுமொழி
3. உலக வசனம்
என்ற வெறுபெயர்கள் உண்டு.
பழமொழி நானூறு நூலில் உள்ள சில பழமொழிகள் :
- " கற்றலின் கேட்டலே நன்று "
- " குன்றின் மேல் இட்ட விளக்கு "
- "தனிமரம் காடாதல் இல் "
- "திங்களை நாய்க் குறைத்தற்று "
- " நிறைகுடம் நீர்த்ததும்பல் இல் "
- "நுணலும் தன் வாயால் கெடும் "
- "பாம்பறியும் பாம்பின் கால் "
- "முறைக்கு மூப்பு இளமை இல் "
- "பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா "
- "முதலில்லார்க்கு ஊதியமில் "
- "புல்மெயா தாகும் புலி "
- "தமக்கு மருத்துவம் தாம் "
- "அணியெல்லாம் ஆடையின் பின் "
கருத்துகள்
கருத்துரையிடுக