கற்போரின் குற்றம் நீக்கும் முதுமொழிக்காஞ்சி | muthumozhikkaanji in pathinenkeel kanakku
முதுமொழிக்காஞ்சி
பதினெண்க்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று முதுமொழிக்காஞ்சி. இன்னூலை எழுதியவர் மதுரை கூடலூர் கிழார் ஆவார். இவர் ஐங்குறுநூறு என்ற நூலையும் தொகுத்துள்ளார். இவர் பிறந்த ஊர் மதுரை ஆகும். இவர் வாழ்ந்த காலம் கி. பி ஐந்தாம் நூற்றாண்டு ஆகும். இன்னூலில் மொத்தம் 100 அடிகள் உள்ளன. ஒரு பகுதிக்கு பத்து அடிகள் வீதம் பத்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
- சிறந்த பத்து
- அறிவுப் பத்து
- பழியாப் பத்து
- துவ்வாப் பத்து
- அல்ல பத்து
- இல்லைப் பத்து
- பொய்ப் பத்து
- எளிய பத்து
- நல்கூர்ந்த பத்து மற்றும்
முதுமொழிக்காஞ்சி குறள் வெண் செந்துறை என்னும் யாப்பு அணியால் பாடப்பட்ட நூல் இது. முதுமொழிக்காஞ்சி என்ற நூலின் பெயரில் காஞ்சி என்ற சொல்லுக்கு நிலையாமை என்பது அர்த்தம். முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சி திணை துறைகளுள் ஒன்று. இன்னூலுக்கு "அறவுரைக்கோவை " என்ற வேறு பெயரும் உண்டு. இன்னூல் கற்போரின் குற்றங்களை நீக்கி அறம், பொருள், இன்பம் அடைவதற்கான வழிமுறைகளை அறிவுரைகளாக கூறி மக்களை நல்ல பாதையில் அழைத்து செல்லும். அறக்கருத்துக்களை கூறும் அறிவார்ந்த நூல். மக்களுக்கு நல் ஒழுக்கங்களை கூறும் நல்ல நூல். இன்னூலின் ஒவ்வொரு பாடலின் முதலிலும் " ஆர்கலி உலகத்து " என்றே தொடங்கும்.
இன்னூலில் இருந்து சில அடிகள்,
"ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம்
-உடைமை
காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப்
- படுதல்
மேதையின் சிறந்தன்று கற்றது
- மறவாமை
வண்மையில் சிறந்தன்று வாய்மை
- யுடைமை
இளமையில் சிறந்தன்று மெய்பிணி
-இன்மை
நலனுடை மையின் நாணுச்
-சிறந்தன்று
குலனுடை மையின் கற்புச்
- சிறந்தன்று
கற்றலில் கற்றாரை வழிபடுதல்
- சிறந்தன்று
செற்றாரைச் செறுத்தலில்
-தற்செய்கை சிறந்தன்று
முன்பெரு கலின்பின் சிறுகாமை
- சிறந்தன்று
கருத்துகள்
கருத்துரையிடுக