கனசெவ்வகத்தின் புறப்பரப்பு மற்றும் பக்க பரப்பு மற்றும் கன அளவு formula
கனசெவ்வகம்
செவ்வகத்தின் முப்பரிமாண (3dimensional)வடிவம் கன செவ்வகம் ஆகும். இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் தீப்பெட்டியின் வடிவம் ஆகும். இந்த வடிவத்தின் புறப்பரப்பு மற்றும் பக்க பரப்பு மற்றும் கன அளவு சூத்திரங்களை காண்போம்.
கன செவ்வகத்தின் புறப்பரப்பு :
கன செவ்வகத்திற்கு மொத்தம் 6 பக்கங்கள் உள்ளன. அந்த ஆறு பக்கங்களின் பரப்பளவுகளின் கூடுதல் அதன் மொத்த புறப்பரப்பு ஆகும்.
கன செவ்வகத்தின்
மொத்த புறப்பரப்பு }=2lb+2bh+2hl
புறப்பரப்பு =2(lb+bh+hl) ச. அலகுகள்
இங்கு l-நீளம்
b-அகலம்
h- உயரம்
கன செவ்வகத்தின் பக்க பரப்பு :
கன செவ்வகத்தின் மேல் மற்றும் அடிப்பகுதி நீங்களாக சுற்றியுள்ள நான்கு பக்கங்களின் பரப்பளவுகளின் கூடுதல் பக்க பரப்பு ஆகும்.
கன செவ்வகத்தின்
பக்க பரப்பு }=2lh+2bh
=2(lh+bh)
பக்கப் பரப்பு =2h(l+b) ச. அலகுகள்
இங்கு l- நீளம், h- உயரம், b- அகலம்
கன செவ்வகத்தின் கன அளவு :
கன உட்புறம் உள்ள கொள்ளளவு அதன் கன அளவு ஆகும்.
கன செவ்வகத்தின்
கன அளவு }=அடிப்பரப்பு ×உயரம்
கன அளவு (v)=lbh க. அலகுகள்
கன செவ்வகத்தின் மூலைவிட்டம் :
கன செவ்வகத்தின்
மூலைவிட்டம் d^2=l^2+b^2+h^2
மூலைவிட்டம்d=√l^2+b^2+h^2அலகுகள்
கருத்துகள்
கருத்துரையிடுக