பழமையான சித்த மருத்துவம் குறிப்புகள் | ancient siddha medicine
சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் என்பது ஒரு இயற்கை முறை மருத்துவம் ஆகும். இந்த மருத்துவ முறையில் மருத்துவ பொருட்கள் அனைத்தும் தாவரத்தில் இருந்தே எடுக்கப்படுகின்றன. இதனால் உடலுக்கு எந்த பக்க விளைவும் இல்லாமல் நோயை குணப்படுத்தும் திறன் உடையது. இதன் பொருட்கள் அனைத்தையும் "மூலிகைகள்" என்பர். இந்த மூலிகை பொருட்கள் தாவரத்தின் வேர், தண்டு, இலை, பூ, காய், கனி,விதை போன்ற பாக்கங்களில் இருந்து எடுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் அந்தந்த நோய்க்கு ஏர்ப்ப நன்கு பக்குவப்படுத்தப்பட்டு நோயாளிக்கு வழங்கப்படுக்குறது.
தோன்றிய இடம் மற்றும் தொற்றுவித்தவர் :
சித்த மருத்துவ முறை இந்தியாவில் தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப்பலமையான மருத்துவமுறை. சித்த மருத்துவ முறையை உருவாக்கியவர்கள் 18 சித்தர்கள். காடு, மழைகளில் கிடைக்கும் மூலிகைத் தாவரங்கள், விலங்கு பொருள்கள், தாது கனிம பொருள்கள் ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து நோய்க்கு ஏற்ற சரியான மருந்தை கண்டறிகின்றனர். சித்தி என்ற சொல்லில் இருந்து சித்தம் என்ற சொல் உருவானது. இதன் பொருள் பேரானந்தம் ஆகும். இந்த மருத்துவ முறை " உணவே மருந்து " என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டது. பதினெண் சித்தர்களில் முதல் சித்தர் அகத்தியர் ஆவார். இவரே சித்த மருத்துவம் உருவாக முதன்மையானவர். எனவே இவரை சித்த மருத்துவத்தின் தந்தை என கூறுகிறோம்.
சில நோய்களுக்கு சித்த மருத்துவ தீர்வுகள் :
1. பல் ஈறுகள் சார்ந்த பிரச்சனை :
சில சத்துக்கள் குறைபாடுகள் காரணமாக பல் ஈறுகள் வலிமை குன்றியும், பல் ஈறுகளில் ரத்த கசிவு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகிறது. மேலும் பல் துளக்கும் போது வலிகள் ஏற்படுகிறது. இதனை போக்க கிராம்பு, ஓமம் இரண்டையும் நன்கு அரைத்து ஒரு தூள் வடிவத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதனை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றியும் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு அரைமணி நேரம் கழித்து வாயை நன்கு கொப்பலித்து கொள்ள வேண்டும். இதனை மூன்று அல்லது நான்கு நாட்கள் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
2. படர்த்தாமரை, அரிப்பு பிரச்சனைக்கு மருந்து :
படர்த்தாமரை பொதுவாக பூஞ்சை தோற்றால் ஏற்படுகிறது. படர்த்தாமரை வந்தால் அதிக அரிப்பு ஏறப்படும். அரிப்பு ஏறப்படும் போது அதை சொரியும்போது அது மேலும் மேலும் படர்ந்து கொண்டே இருக்கும். எனவே முதலில் படர்த்தாமரை வந்தால் அதை சொரிய கூடாது. பாதிப்பு உண்டான இடத்தில் சுடு தண்ணீரை கொண்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பிறகு பனை மரத்தின் தண்டு பகுதியை கொத்தி எடுக்கும்போது கிடைக்கும் பனை மரத்தின் தண்டு சாற்றிணை எடுத்து அதன் மீது பூச வேண்டும். இதனை தொடர்ந்து பத்து நாட்களோ அல்லது படர்த்தாமரை நீங்கும் வரையிலோ காலை, மாலை இரு வேலையும் செய்து வர வேண்டும். இது சிறந்த பலனை கொடுக்கும். மேலும் ஒரு சிகிச்சை முறை இருக்கிறது. மஞ்சள் மற்றும் அருகம் புல் ஆகிய இரண்டையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொண்டு படர்த்தாமரை மீது பூச வேண்டும். இத்தனையும் படர்த்தாமரை நீங்கும் வரை தொடர்ந்து பூச வேண்டும். குறிப்பாக இந்த சிகிச்சை முறையை மேற்கொக்கொள்ளும் போது முட்டை, மீன், கோழி இறைச்சி போன்றவற்றை உண்ணாமல் பத்தியம் இருக்க வேண்டும். கடலை எண்ணெயை பயன்படுத்துவத்தை தவிர்க்க வேண்டும். இதற்க்கு பத்தியம் இருப்பது மிக முக்கியம். இது போன்ற பிரச்சனைகள் மாணவர் விடுதிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் பாதிப்புக்கு இருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. எனவே பாதிப்புக்கு உள்ளனவர் பயன்படுத்திய துணிகள் மற்றும் அவர் பயன்படுத்திய படுக்கை பொருட்கள் மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. இதன் மூலம் பற்றவர்களுக்கு பரவுவதை தவிக்கலாம்.
3. இருமல் பிரச்சனையை விரட்டியடிக்கும் தீர்வு :
பொதுவாக சளி பிடித்தால் இருமல் இருமல் வருவது இயல்பே. அதுவும் உறவு நேரங்களில் அதிகட்டியாக அடிக்கடி வந்து தூக்கத்தை கெடுக்கும். இந்த நேரங்களில் இருமலை விரட்ட மிக சிறந்த வழி நான்கு அல்லது ஐந்து கரு மிளகை எடுத்து அதனை நன்கு மென்று தின்ன இருமல் குறையும். துளசியும் இருமலுக்கு மிக சிறந்த முறையில் பலன் அளிக்கும்.
4. தலைவலியை அகற்ற :
தலைவலிகளில் ஒற்றை தலைவலி, குறுகிய நேர தலைவலி, நீண்ட நேர தலைவலி என பல வகைகள் உண்டு. மேலும் தலைவலி ஆனது சில காரணங்களாலும் ஏற்படுகிறது. அவைகள், தலைக்கு குளிக்கும்போது, வெயிலில் அதிகம் இருக்கும்போது, அதிக மன அழுத்தத்தில் உள்ள போது என சில காரணத்தால் தலைவலி ஏற்படுகிறது. இதற்க்கு சிறந்த தீர்வு அதிமதுரம், துளசி மற்றும் சொம்பு இவை மூன்றையும் சேர்த்து நன்கு அரைத்து தேனில் கலந்து உன்ன தலைவலி தீரும்.
5. அஜீரண கோளாறுக்கு தீர்வு :
பொதுவாக அஜீரண கோளாறு ஆனது சரியாக வேகாத உணவை உண்பதாலும், சரியாக உணவை மென்று திண்ணாததாலும் ஏற்படுகிறது. இதனால் வயிற்றுவலி போன்ற பிரச்சனைகளும் கூட ஏற்படுகிறது. இதற்கு சரியான தீர்வு சீரகத்தை நன்கு கொதிக்க வைத்த நீரை ஆற வைத்து அதன் பிறகு அதனில் இட்டு சிலமணி நேரம் அதனை ஊர வைத்து அந்த தண்ணீரை கல்கண்டு உடன் சேர்த்து காலை, மாலை நேரங்களில் குடித்து வர அஜீரண கோளாறு அகலும்.
6. அடிக்கடி பசி எடுக்க தீர்வு :
ஒவ்வொருவருக்கும் பல மணி நேரம் ஆனாலும் பசி எடுக்கமல் இருக்கும். இதனால் உடலில் சத்து குறைபாடு ஏற்படுகிறது. பல நோய்களும் வருவதற்கு அடிப்படையாக அமைகிறது. இதற்கு சில தீர்வுகள் உண்டு. புதீனா கீரையை வாரம் இரு நாட்கள் உண்டு வந்தால் பசி எடுக்காத பிரச்சனை நீங்கும். மேலும் எலுமிச்சை பழ ஜூஸ் போட்டு குடிப்பதால் பசியை தூண்டும்.
7. உடல் எடையை அதிகரிக்க தீர்வு :
மிகவும் உடல் மெலிந்தும் எலும்பும் தோலுமாக இருப்பவர்க்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் உடல் எடையை அதிகரிக்க நன்கு பழுத்த பூசணி விதைகளை எடுத்து அதை நன்றாக காயவைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு தூளாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்றாக காய்ச்சிய பாலில் சிறிதளவு சேர்த்து குடித்து வர வேண்டும். இப்படி சில மாதங்கள் செய்து வர உடலில் எடை அதிகரிப்பதை உணர முடியும்.
8. இறைப்பை புண்க்கு தீர்வு :
சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது மற்றும் உணவு சரிவர எடுத்து கொள்ளாமல் இருப்பதாலும் மேலும் தொடர்ந்து பல மணி நேரம் எடுக்காமல் இருப்பதால் இறைப்பை, குடல், தொண்டை மற்றும் வாய் பகுதியிலும் கூட புண்கள் உருவாகிறது. மேலும் அதிகமான காரம் உள்ள உணவுகளை உண்பதன் மூலமும் உணவு பாதைகளில் புண்கள் உருவாகிறது. இறைப்பை புண் இருந்தால் வயிற்று வலி மற்றும் வயிற்று எரிச்சல் அடிக்கடி வருவதன் மூலம் அறியலாம். இதற்கு ஒரு சிறந்த தீர்வு மணத்தக்காளி கீரை ஆகும். மணத்தக்காளி கீரையை வாரம் மூன்று அல்லது நான்கு நாட்கள் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் இறைப்பை புண்களை குணப்படுதலாம். இது பொதுவாக உணவு பாதை புண் சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் சிறப்பாக செயல்படும்.
9. சேற்று புண்ணை குணப்படுத்த தீர்வு :
பொதுவாக சேற்றில் அதிக நேரம் இருப்பதால் அதில் உள்ள பூஞ்சை தொற்றுகள் கால் விரல் இடைவெளிகள் தொற்றி கொள்கின்றனர். பின் நாளைடைவில் விரல் இதுக்குகளை சிதைத்து புண்களை உண்டாக்கி வலி ஏற்படுகிறது. அரிப்பும் மிகுதியாக இருக்கும். இதை கவனிக்காமல் இருந்துவிட கூடாது. கவனிக்கவில்லை எனில் இது பெரிய பாதிப்பை கூட ஏற்படுத்தும். ஆனால் இதை குணப்படுத்த மிக எளிய தீர்வு உண்டு. மருதாணி இலைகளை எடுத்து அதை மைய அரைத்து பாதிப்புக்கு உள்ளான இடத்தை சுற்றி பூச வேண்டும். பின்னர் சில நாட்களுக்கு காலை ஈரமான இடங்களில் வைக்க கூடாது. பெரும்பாலும் உலர்ந்த நிலையிலேயே காலை வைத்துக்கொள்ள வேண்டும்.
10. நக சுத்திக்கு தீர்வு :
நகசுத்தி பந்தால் பாதிக்கப்பட்ட விரல் நன்கு வீங்கி விடும். அதன் பின் முக அதிகமான வலி ஏற்படும். இதன் மூலம் நக சுத்தி வந்ததை அறியலாம். இதுவும் தோற்று கிருமிகளால் உருவாகிறது. சிதற்க்கு சிறப்பான தீர்வுகள் இரண்டு உண்டு. ஒன்று பாதிக்கப்பட்ட நகத்தை ஒரு எலுமிச்சை பழம் கொண்டு நகம் மூழ்குமாறு சொருகி கொள்ள வேண்டும். இந்த நிலையில் விரலை ஐந்து முதல் ஏழு மணி நேரம் வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது வழி வெற்றிலை சாற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து நகசுத்தி வந்த விரலில் பூசிக் கொள்ள வேண்டும். இவ்விரு தீர்வுகள் மூலம் நக சுத்தியை குணப்படுதலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக