மாணிக்கவாசகர் திருவாசகத்தை இயற்றினார்.|maanikkavaasakar
மாணிக்கவாசகர்
சைவ சமய குரவர்கள் நான்கு பேர் ஆவார். அவர்கள் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் (அப்பர் )மற்றும் மாணிக்கவாசகர் ஆவர். மாணிக்கவாசகர் திருவாதவூரை சேர்ந்தவர். எனவே இவரை "திருவாதவூரடிகள் "என்றும் அழைப்பர்.இவர் மதுரையை ஆண்ட அரிமர்த்தண பாண்டியனின் அவை தலைமை அமைச்சராக பணியாற்றினார். இவரின் புலமையால் பாண்டிய மன்னனால் "தென்னவன் பிரமராயன் "என அன்போடு அழைக்கப்பட்டார்.இவருக்கு அருள்வாசகர் என்ற வேறு பெயரும் உண்டு.
மாணிக்கவாசகர் திருவாசகம், திருக்கோவையார் என்ற இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். திருவாசகம் கற்போரின் நெஞ்சை கனிந்துருக்க செய்யும்."திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கு உருகார் " என்பர். இவ்வளவு புலமை மிக்க புலவர் 32ஆண்டுகள் மட்டும் வாழ்ந்தர். இவர் வாழ்ந்த காலம் கி. பி 9ஆம் நூற்றாண்டு என்பர்.
கருத்துகள்
கருத்துரையிடுக