குற்றாலக் குறவஞ்சி |kutraala kuravanji

குற்றாலக்                                   குறவஞ்சி


           -திரிகூட  ராசப்ப  கவிராயர்.

     தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் உள்ளது குற்றாலம் என்னும் ஊர்.அந்த அழகு நிறைந்த குற்றாலத்தையும்  அங்கு எழுந்தருளயிருக்கும் குற்றாலனாத்தரையும்  போற்றி பாடும் நூல் குற்றாலக் குறவஞ்சி ஆகும். இதனை திருகுற்றாலக் குறவஞ்சி எனவும் குறத்திப் பட்டு எனவும் அழைப்பர். நூல் 96வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று.

       சங்க இலக்கியங்கள் மன்னன், வீரர், உயர்ந்த மனிதர், கொடை வள்ளல்களை போற்றி பாடப்பட்டது. சமய நூல்களோ கடவுளை போற்றி பாடப்பட்டது.சிற்றிலக்கியங்களோ  கடவுளையும் மனிதர்களையும் பாடியது. இந்த சிற்றிலக்கியங்களில் ஒன்றான குற்றால குறவஞ்சியோஇசைத்தமிழ்  இனிமையுடனும் நாடகத் தமிழின் எழிலினையும் இயற்றமிழ் செழுமையையும்  ஒருங்கே கொண்ட முத்தமிழ்  முத்தமிழ் காவியமாக திகழ்கிறது.பாட்டுடை தலைவன் உலா வரும்போது அவனை கண்ட தலைவி அவன் மீது காதல் வயப்பட குறவர் குல பெண்ணோருத்தி குறி கூறி பரிசு பெறுவதை பாடும் நூல் குறவஞ்சி.பரிசு பெற்று வந்த சிங்கனுக்கும் சிங்கிக்கும் இடையேயான உரையாடல் பாடல்களாக பாடப்பட்டுள்ளது. திரிகூட  ராசப்பக் கவிராயர் மதுரை முத்து விஜயரங்க சொக்கநாதார் வேண்டுகோலுக்கு இணங்க இன்னூலை இயற்றினார்.இன்னூல் திரிகூட ராசப்ப கவிராயரின் "கவிதை கிரீடம் "எனப்  போற்றப்படுகிறது.

திரிகூட ராசப்பக் கவிராயர் :

             திருகுற்றாலக் குறைவஞ்சியை எழுதியவர் திரிகூட ராசப்பக் கவிராயர் ஆவார்.இவர் பிறந்த ஊர் திருநெல்வேலி.இவர் குற்றால நாதர் கோவிலில் பணி செய்த போது  சைவ சமய கல்வி மற்றும் இலக்கண இலக்கியத்திலும் தேர்ச்சி பெற்று விளங்கினார்."திருகுற்றால நாதர் கோவில் வித்துவான் "என அனைவராலும் அழைக்கப்பட்டார். இவர் குற்றால நாதர் மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளையின் சுற்றளவு, பரப்பளவு மற்றும் கன அளவு formula | cylinder

வட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவிர்க்கான சூத்திரம் | area and circumference formula of circle

கனசெவ்வகத்தின் புறப்பரப்பு மற்றும் பக்க பரப்பு மற்றும் கன அளவு formula