முக்கோணத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு formula | triangle
முக்கோணம்
முக்கோணம் என்பது மூன்று கோட்டுத்துண்டுகள் இணையும் போது ஏற்படும் மூன்று கோணங்கள் கொண்ட அமைப்பு ஆகும். நம் வாழ்வில் முக்கோண வடிவத்தை பல இடங்களில் பயன்படுத்துகிறோம். உதாரணமாக சாலையோரமுள்ள சாலை பாதுகாப்பு பலகைகள் முக்கோண வடிவில் இருப்பதை கவனித்திருப்போம். அந்த முக்கோண வடிவ பொருளின் சுற்றளவு, பரப்பளவு சூத்திரங்களை காண்போம்.
முக்கோணத்தின் சுற்றளவு :
முக்கோணத்தின் மூன்று பக்கங்களின் அளவுகளின் கூடுதல் அதன் சுற்றளவு ஆகும்.
முக்கோணத்தின்
சுற்றளவு= AB+ BC+CA
சுற்றளவு = a+b+c அலகுகள்.
இங்கு a, b, c என்பன பக்கங்கள்.
முக்கோணத்தின் பரப்பளவு :
முக்கோணத்தின் ஏதோ ஒரு பக்கம் மற்றும் அந்த பக்கத்தின் குத்துயரம் ஆகியவற்றின் பெருக்கற்பலனின் பாதியளவு முக்கோணத்தின் பரப்பளவு ஆகும். அதாவது அடிப்பக்கம் ×உயரம் /2 ஆகும்.
முக்கோணத்தின்
பரப்பளவு= அடிப்பக்கம் ×உயரம்/2
பரப்பளவு = bh/2 ச. அலகுகள்
இங்கு b என்பது அடிப்பக்கம்
h என்பது குத்துயரம்
கருத்துகள்
கருத்துரையிடுக