அரைக்கோளத்தின் வளைப்பரப்பு மற்றும் புறப்பரப்பு மற்றும் கனஅளவு formula| semi sphere
அரைக்கோளம்
ஒரு முழுக்கோளத்தை பாதியாக வெட்டினால் கிடைக்கும் பகுதி அரைக்கோளப்பகுதி ஆகும். அரைக்கோளத்திற்கு உதாரணமாக சூப் குடிக்கும் கிண்ணம் மற்றும் சமையல் செய்யும் வானல் பாத்திரம் ஆகியவற்றை கூறலாம். அரைக்கோளமானது வட்ட வடிவ மேல் பகுதியையும் அரைக்கோள வளைந்த பகுதியையும் கொண்டுள்ளது.
அரைக்கோளத்தின் வளைப் பரப்பு :
அரைக்கோளத்தின் வட்ட வடிவ மேல் பகுதியை தவிர்த்து வெளியே உள்ள அனைத்து வளைந்த பகுதியும் அதன் வளைப்பரப்பு ஆகும். அரைக்கோளத்தின் வளைப்பரப்பு ஆனது முழு கோளத்தின் வளைப்பரப்பில் பாதி (1/2) அளவு ஆகும்.
அரைக்கோளத்தின் கோளத்தின்
வளைப்பரப்பு =வளைப்பரப்பு /2
= 4πr^2/2
அரைக்கோளத்தின்
வளைப்பரப்பு=2πr^2 ச. அலகுகள்
இங்கு πயின் மதிப்பு 22/7(அல்லது )3.14
r-ஆரம்
அரைக்கோளத்தின் மொத்த புறப்பரப்பு :
அரைக்கோளத்தின் மொத்த புறப்பரப்பு என்பது வட்ட வடிவ மேல் பகுதியின் பரப்பளவு மற்றும் அதன் வளைப்பரப்பின் கூடுதல் ஆகும்.
அரைக்கோளத்தின்
மொத்த புறப்பரப்பு=2πr^2+πr^2
மொத்த புறப்பரப்பு =3πr^2ச. அலகுகள்
அரைக்கோளத்தின் கனஅளவு :
ஒரு அரைக்கோள வடிவ கிண்ணத்தில் எவ்வளவு தண்ணீர் நிரப்ப முடியுமோ அதுவே அதன் கொள்ளளவு அல்லது கனஅளவு ஆகும்.ஒரு முழு கோளத்தின் கன அளவில் பாதியளவு (1/2) அரைக்கோளத்தின் கன அளவு ஆகும்.
அரைக்கோளத்தின் கோளத்தின்
கனஅளவு =கன அளவு /2
=4/3πr^3/2
அரைக்கோளத்தின்
கனஅளவு(V) =2/3πr^3க. அ
கருத்துகள்
கருத்துரையிடுக