கூம்பின் வளைபரப்பு மற்றும் மொத்த புறப்பரப்பு மற்றும் கன அளவு formula | cone
கூம்பு
கூம்பு வடிவ பொருள்களை நம் வாழ்வில் பல இடங்களில் பார்க்கிறோம் மேலும் பல இடங்களில் பயன்படுத்துகிறோம். உதாரணமாக கூறினால் பிறந்த நாள் விழாவில் தலையில் வைக்கும் கூம்பு வடிவ காகித தொப்பி மற்றும் கோன் ஐஸ் கிரீமில் பயன்படுத்தும் கூம்பு வடிவ அடிப்பகுதி ஆகியவற்றை கூறலாம்.
கூம்பின் வளைப் பரப்பு :
கூம்பின் வட்ட வடிவமான அடிப்பரப்பை தவிர்த்து மேலே தெரியும் பகுதி வளைப் பரப்பு ஆகும்.
சாயுயரம் l மற்றும் ஆரம் r ஆகியவற்றின் பெருக்கல்பலனில் பாதி அளவு கூம்பின் வளைப் பரப்பு ஆகும்.
கூம்பின் வளைப் பரப்பு = lr/2
l=2πr, r=l
இங்கு, =2πr×l/2
l என்பது சாயுயரம்
r என்பது ஆரம்
வளைப்பரப்பு (CSA)=πrl ச. அலகுகள்
கூம்பின் மொத்த புறப்பரப்பு :
கூம்பின் வளைப்பரப்பு மற்றும் வட்ட வடிவமான அடிப்பகுதியின் பரப்பின் கூடுதல் மொத்தபுறப்பரப்பு ஆகும்.
கூம்பின் மொத்த
புறப்பரப்பு = πrl+πr^2
புறப்பரப்பு(TSA) = πr(l+r)ச. அலகுகள்
கூம்பின் கன அளவு :
கூம்பின் உட்பகுதியில் எவ்வளவு பொருள் அடக்கப்படுகிறதோ அதுவே அந்த கூம்பின் கொள்ளளவு அல்லது கன அளவு ஆகும்.
ஒரு உருளையின் கன அளவானது மூன்று கூம்பின் கூம்பின் கன அளவிற்கு சமம். அதாவது,
3 கூம்பின் கனஅளவு =1 உருளையின்
கனஅளவு
கூம்பின் கனஅளவு = 1/3πr^2h க. அ
π மதிப்பு = 22/7 அல்லது 3.14
l என்பது சாயுயரம்
r என்பது ஆரம்
h என்பது குத்துயரம்
கருத்துகள்
கருத்துரையிடுக