a பக்க அளவு கொண்ட சதுரத்தினுள் வரையபடும் மிகப்பெரிய வட்டத்தின் பரப்பளவு
a அளவுள்ள பக்க அளவு கொண்ட ஒரு சதுரம் உள்ளது. அந்த சதுரத்தினுள் வரையப்படும் மிகப்பெரிய வட்டத்துடைய பரப்பளவு பற்றி விளக்கத்துடன் காண்போம்.
மேலே கொடுக்கப்பட்ட படம் இதற்கான வரைபடம் ஆகும். இதற்கு வட்டத்தின் பரப்பளவு சூத்திரத்தை கொண்டு விளக்கம் பின்வருமாறு,
வட்டத்தின் பரப்பளவு=πr^2ச. அலகுகள்.
விட்டம் (d)=2r
a பக்க அளவு வட்டத்தின் விட்டத்திற்கு சமம்.
a=d
a=2r
r=a/2
வட்டத்தின் பரப்பளவு =π×a/2×a/2
=πa^2/4 ச. அலகுகள்.
கருத்துகள்
கருத்துரையிடுக