எளிய வழிகளில் எடையை குறைக்கும் சில வழிகள் | Easy ways to weight loss in tamil
உடல் எடையை குறைக்கும் வழிகள் தற்போதையை சூழலில் நம் பெரும்பாலான மக்களிடையே காணப்படுவது உடல் எடை அதிகரித்து குண்டானவர்களாக காணப்படுகின்றனர். இதற்கான முக்கிய காரணம் அதிக கலோரி உணவு எடுத்து கொள்வது, குறைவான உடல் உழைப்பு, போதைய உடல் பயிற்சி இல்லாமை, சரியான உணவு பழக்கம் இன்மை, துரித உணவை (fast food, chips and oil items)அதிகமாக விரும்புவது ஆகியவை ஆகும். இதனால் உடலில் அதிக கொழுப்பு சேகரிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்கிறது. இதனால் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் அதிகரிப்பு, இதய நோய், இரத்த குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகள் உடலில் உண்டாகின்றன. " சரியான வயதிற்குரிய எடையை விட 10% அதிகமாக இருப்பது உடல் பருமன் என கூறப்படுகிறது". உடல் பருமனை கண்டுபிடிக்க ஒரு வழிமுறை உண்டு. உடல் பருமனை உடல் எடை குறியீடு என கூறப்படும் BMI (Body Mass Index) என்ற அளவீட்டை கொண்டு அளவிடலாம். உங்களின் உடல் எடையை கிலோகிராம் அளவில் கொண்டு உங்கள் உடல் உயரத்தின் மீட்டர் அளவின் மடங்கினால் வகுத்தால் BMI அதாவது நீங்கள் கு...