முடி கொட்டுவதை தடுக்க வழிகள் உள்ளது கவலைபடாதீர். | hair fall solutions in tamil
முடி உதிர்வு பிரச்சனைக்கான தீர்வுகள் ஒருவருடைய அழகை உயர்த்தி காட்டுவத்தில் அவருடைய முடியானது முக்கிய பங்கு வாகிக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான ஸ்டைலான தோற்றத்தில் முடியை வாரி தன்னை அழகுபடுத்தி கொள்கின்றனர். எங்கு கண்ணாடியை பார்த்தாலும் முதலில் சரி செய்வது முடியை தான். இவ்வாறு முடியை உயிரென பார்ப்பவர்களுக்கு உள்ள முக்கியமான பிரச்சனை எதுவென்றால் அது முடி உதிர்வு. ஒவ்வொரு முறை தலை சீவும்போதும் கொட்டும் முடியை பார்த்து வருந்துபவர்கள் அதிகம். இது அவர்கள் அழகையே கெடுத்து விடுகிறது. பொது இடங்களில் நடக்கும் போது கூட கூச்சமுடனும் வெட்கத்துடனும் நடக்கும் நிலை ஏற்படுகிறது. முடி உதிர்வுக்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். ஆனால் சில இயற்கையாக உள்ளவை. அவற்றை நம்மால் தவிர்க்க முடியாது. நாம் தினமும் காலை முதல் மாலை வரை சுமார் 30 முதல் 50 வரை எண்ணிக்கையிலான முடிகளை இழக்கிறோம். அன்றாடம் ஏற்படும் சுற்று சூழல் மாறுபாடு, மரபியல் ரீதியாக, ஊ...